மாணவர்கள் பள்ளி சீருடையுடன் அனைத்து பேருந்துகளிலும் கட்டணமின்றி பயணிக்கலாம் ,போக்குவரத்து அமைச்சர்.விரைவில் புதிய பாஸ்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாண்வர்களின் வசதிகாக பள்ளி சீருடையுடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Students can travel free of charge on all buses in school uniform; Transport Minister announces
Students can travel free of charge on all buses in school uniform; Transport Minister announces google
2 min read

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் , கடந்த மாதம் இறுதி தேர்வுகள் முடிந்து விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருந்தது .

அரசு, அரசு உதவி பெறும்,ம் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 16.04.2026 அன்று நிறைவடைகின்றன. 17.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

மீண்டும் பள்ளிகள் திறப்பு

தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து புதிய கல்வி ஆண்​டில் (2026-27) 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதி​யும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி​யும் பள்​ளி​கள் மீண்​டும் திறக்​கப்​படும் என்று முன்​னர் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், வெவ்​வேறு வகுப்​பு​களில் படிக்​கும் குழந்​தைகளைக் கொண்ட குடும்​பங்​கள் பல்​வேறு சிரமங்​களை எதிர்​கொள்​கின்​றனர். அனைத்து வகுப்​பு​களுக்​கும் ஒரே நாளில் பள்​ளி​கள் திறக்க வேண்​டும் என்று பெற்​றோர், ஆசிரியர்​கள் மற்​றும் பல்​வேறு தரப்​பினரிடம் இருந்து கோரிக்​கைகள் பெறப்​பட்​டன.

வானிலை முன்​னறி​விப்​பு, பள்​ளி​கள் மீண்​டும் திறக்​கப்​படு​வதற்கு முன்பு சுகா​தா​ரம், குடிநீர் வசதி​கள், போக்​கு​வரத்து ஏற்​பாடு​கள் ஆகியவை தொடர்​பான ஆயத்த பணி​களை​யும் தமிழக அரசு ஆய்வு செய்​தது. இவற்றை கவன​மாக பரிசீலித்த பின்​னர், பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் அறி​வுறுத்​தலின்​படி, தமிழகத்​தில் உள்ள அனைத்து பள்​ளி​களும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி திறக்​கப்​படும். என்று பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது

மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

இந்த நிலையில் மாணவர்களின் வசதிக்காக அனைத்து அரசு பேருந்துகளிலும் மாணவர்கள் இலவசமாக பயணிகலாம் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அமைச்சர் கூறியதாவது

026 – 2027 கல்வியாண்டிற்கான வேலை நாள் வரும் 4ஆம் தேதி தொடங்க இருக்கிறது பள்ளி தொடங்கியப்பின்னே புதியஇலவச பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் இந்நிலையில் மாணவர்கள் தங்களது பள்ளி சீருடையுடன் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க. வரும் 04.06.2026 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும்.

2026-27 கல்வியாண்டில் மாணவர் மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக எற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி எவ்வித சிரமமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுகின்றது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in