கோடை விடுமுறை சிறப்பு ரயில் : திருநெல்வேலி to எழும்பூர் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Summer vacation special train 
Tirunelveli - Egmore operation; Southern Railway
Summer vacation special train Tirunelveli - Egmore operation; Southern Railway google
1 min read

சிறப்பு ரயில் இயக்கம்

வருகிற தமிழ் புத்தாண்டு மற்றும் கோடைகால விடுமுறையை ஒட்டி கூட நெரிசலை தவிர்க்க தெற்கும் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

அந்த வகையில் சென்னை எழும்பூர் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

ரயில்களின் இயக்க விவரம்

இந்த சிறப்பு ரயிலானது திருநெல்வேலியிலிருந்து வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06070) மறுநாள் 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு எழும்பூா் நிலையத்தை வந்தடையும் என்றும்

மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வரும் 17, 24, மே 1 தேதிகளில் பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06069) மறுநாள் ஏப்ரல் 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். என்று தெற்கும் ரயில்வே அறிவித்துள்ளது

திருநெல்வேலியிலிருந்து ரயில் இயக்கம் விவரம்

திருநெல்வேலியிலிருந்து வரும் 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06166) மறுநாள் 13, 20, 27 ஆகிய தேதிகளில் பகல் 11.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06165) மறுநாள் 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் அறிவித்துள்ளது

ரயிலின் சிறப்பம்சங்கள்

இந்த சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டி, 6 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதி பொருளாதார வசதிப் பெட்டிகள், ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன

சிறப்பு ரயில் நின்று செல்லும் இடங்கள்

இந்த கோடைகால சிறப்பு ரயிலானது கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம்

அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :தமிழ் புத்தாண்டு பண்டிகை ; சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in