

கோக்கைன் எனப்படும் போதைப்பொருளை பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால், திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் கலந்து கொண்ட பல விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
இந்தநிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கும் அவர், சென்னை திரும்பியதும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
"கழுகு, வானவராயன், வீரா, வன்மம்" உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கிருஷ்ணா.
ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது, தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=====