”தீபத்தூணில் ஒளிரப்போகும் கார்த்திகை தீபம்” : 100 ஆண்டுகால சட்டப் போராட்டம், வரலாற்று பின்னணி..!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
Supreme Court order, Karthigai Deepam (lamp) evening at 6:00 PM on *deepa thoon*
Supreme Court order, Karthigai Deepam (lamp) evening at 6:00 PM on *deepa thoon* source:thamizhalai,ai generated
3 min read

திருப்பரங்குன்றம் வரலாறு

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். சங்க இலக்கியங்கள், குடைவரைக் கோயில் கலை மற்றும் பல்வேறு மன்னர்களின் திருப்பணிகளால் இதற்கு தனித்துவமான வரலாறு உள்ளது.

புராண கதையின்படி, சூரபத்மன் வென்ற முருகப்பெருமான், தெய்வானையை மணம் முடித்த தலம் இதுதான்.

பாண்டிய மன்னர்கள் காலத்தில் மலைக் குடையப்பட்டு அமைக்கப்பட்ட குடைவரைக் கோவில் இது. நாயக்கர்கள் காலத்தில் ஏழு நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.

மலைப் பகுதியில் சமணர்களின் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. மலையின் மீது சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.

சுமார் 887.3 அடி உயரம் கொண்ட திருப்பரங்குன்றம் மலை, கிரிவலம் வரும் தலமாகவும் விளங்குகிறது.

தீபத்தூண் தீபம் பிரச்சினை

சரி கார்த்திகை தீபம் ஏற்றும் பிரச்சினைக்கு வருவோம். திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் மேல் பல ஆண்டுகாலமாக கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்துக்களின் கோரிக்கை

மலையில் உள்ள மற்றொரு தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை தான் நீண்ட காலமாக தீராமல் இருக்கு. பிரச்னை நீண்ட காலகாலமாக நீடித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தரப்பில், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுது.

சிக்கந்தர் பாதுஷா தர்கா

மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஒரு கல்தூண் உள்ளது. இது பண்டைய காலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட 'தீபத்தூண்' என இந்து அமைப்புகள் கூறுகின்றன.

தீபத்தூணா? சர்வே கல்லா?

ஆனால், அரசு மற்றும் தர்கா தரப்பில் அது ஆங்கிலேயர் காலத்தில் நில அளவீட்டுக்காக நடப்பட்ட 'சர்வே கல்' என்ற வாதம் வலுவா முன்வைக்கப்பட்டு வருது.

1915ம் ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உரிமை மற்றும் பயன்பாடு தொடர்பான முரண்பாடுகள் தொடங்கின.

நீதிமன்றங்களின் உத்தரவுகள்

5 ஆண்டுகள் கழிச்சு, 1920ல திருப்பரங்குன்றம் முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது எனக் கோரி கோயில் நிர்வாகம் சிவில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சாகுபடி நிலம் மற்றும் தர்கா பகுதி தவிர்த்து மலையின் மற்ற பகுதிகளுக்கு கோயில் உரிமை கோரியது.

நெல்லித்தோப்பு பகுதிக்கு முஸ்லிம் தரப்பும், காலியிடங்களுக்கு அரசும் உரிமை கோரின. இதை விசாரித்த மதுரை துணை நீதிமன்றம், 1923ல நெல்லித்தோப்பு, தர்கா பகுதி, கொடிமரம் மற்றும் படிக்கட்டுகள் தவிர்த்து மலையின் பெரும்பாலான பகுதிகள் கோயிலுக்குச் சொந்தமானவை என தீர்ப்பு கொடுத்துச்சு.

மேல்முறையீட்டை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 1926ல மலை அரசுக்குச் சொந்தமானது அப்படின்னு தீர்ப்பு சொல்லி, வழக்கை தள்ளுபடி செய்தது.

பிறகு இந்த வழக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததால, 1931ல லண்டன் பிரிவு கவுன்சில் போக, அங்கேயும் உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதியாச்சு.

1994ல் மீண்டும் தீபத்தூண் பிரச்சினை

அதன்பிறகு 63 ஆண்டுகள் கழிச்சு, 1994ல மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ ஆரம்பித்தன.

2021 இல் தர்காவில் மரக் கொடிமரத்திற்குப் பதிலாக இரும்புக் கொடிமரம் நடுவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்து சட்டப் போராட்டங்கள் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறின.

2025ல மலையை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி கோரிய நிலையில், பழங்காநத்தம் சந்திப்பில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

திருப்பரங்குன்றம் மலையில அசைவ உணவு மற்றும் விலங்கு பலியிடலுக்கு எதிரான மனுக்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டதால், வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு போச்சு.

இதுல மலையில் விலங்கு பலியிடவும், அசைவ உணவு சமைக்கவோ, எடுத்துச் செல்லவோ, பரிமாறவோ தற்காலிகத் தடை விதித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பிச்சாரு.

தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு

அதன்பிறகு டிசம்பர் மாதம் தீபத்தூண் வழக்கு பெரிய திருப்பத்தை நோக்கி போனது. வழக்கமான இடங்களுடன் சேர்த்து 'தீபத்தூண்' கல் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதனை நிறைவேற்றக் கோரி டிசம்பர் 3 அன்று இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போ ஆட்சியில இருந்த திமுக அரசும் மேல்முறையீடு செய்தது.

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஜனவரி 6 அன்று உறுதி செய்தது.

அதுமட்டுமல்லாம போராட்டக்காரர்கள் மீதான வழக்கை விசாரிக்கவும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிச்சது.

இதற்கு இடையே உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தூணில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி மனுவை ஆய்வு செய்ய முடிவு செஞ்சது.

டிசம்பர் 24ல் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தமாதம் கார்த்திகை தீபத்திற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று மட்டும் 'தீபத்தூணில்' தீபம் ஏற்ற ஒருமுறை அனுமதி கொடுத்துச்சு.

நீதிமன்ற தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை

ஆனா, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே மகா தீபம் ஏற்றப்பட்டது.

நீதிமன்ற அவதூறு வழக்குகள்

உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தாததைத் தொடர்ந்து, இராம. இரவிக்குமார், வழக்கறிஞர் வி. ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் மற்றும் கோயில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

ஆட்சியரின் பதிலுக்கு கடும் கண்டனம்

கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மதுரை ஆட்சியர், “தேவஸ்தான அறங்காவலர் குழு பாரம்பரிய வழக்கத்தைக் காரணம் காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒப்புதல் அளிக்கவில்லை” எனக் கூறி, உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டாரு.

விளாசிய நீதிபதிகள்

நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில நேத்து காரசார விவாதம் நடந்துச்சு. மதுரை ஆட்சியரின் முதற்கட்ட விளக்கத்தை அடியோடு நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கேள்விக் கணைகளை தொடுத்து துளைச்சாங்க.

அறங்காவலர் குழு கலைப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்து அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானம் "நீதிமன்றத்தை நேரடியாகவும் அப்பட்டமாகவும் அவமதிக்கும் செயல்” எனக் கடுமையாக கண்டிச்சதோட, அறங்காவலர் குழுவை தற்காலிகமாக கலைத்தும் உத்தரவு போட்டாங்க.

மத்திய படை பாதுகாப்பில் திருப்பரங்குன்றம் மலை

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்ட நீதிபதிகள், தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளதோட, இந்த விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, அறங்காவலர் குழுவினர் நேரில் ஆஜராகவும் கடுமையாக உத்தரவு பிறப்பிச்சு இருக்காங்க.

கோவிலை நிர்வகிக்க முன்னாள் நீதிபதிகள்

கோயிலை நிர்வகிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன், வி.பார்த்திபன் தலைமையில் கோயில் நிர்வாகக் குழுவை அமைச்சு இருக்கிற உச்ச நீதிமன்றம், நிர்வாகத்தை உடனடியாக கட்டுப்பாட்டில் எடுக்கவும் உத்தரவு போட்டு இருக்காங்க.

இன்று மாலை தீபம் ஏற்றப்படுகிறது

இன்னிக்கு மாலை 6 மணி அளவில தீபத்தூணில் அதாவது மலைத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.

தர்காவிற்கு முழுபாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு பக்தரும் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும். தர்காவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அங்கு நடைபெறும் செயல்களில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. தர்கா மற்றும் கோயில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக அந்த பகுதியில் வேலி அமைக்கலாம், அப்படின்னு உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு.

100 ஆண்டு சட்டப் போராட்டம் முடிவு

அதன்படி, 100 ஆண்டுகளுக்கும் மேலான சட்டம் போராட்டம் முடிவுக்கு வந்து, இன்று மாலை 6 மணிக்கு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஒளிரப்போகுது. இந்துக்களோட பல ஆண்டு கனவும் நனவாக போகுது. அதேசமயம், மத நல்லிணக்கத்திற்கு எப்போதும் துணை நிற்கிற தமிழக மக்கள், இந்த நிகழ்வையும், ஒரு பாரம்பரிய நிகழ்வா எடுத்துக் கிட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டியா நிற்க போறாங்க.

======================