
ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்கள் :
Aagama Vidhi Hindu Temples in Tamil Nadu : தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான கோவில்கள் உள்ளன. இவற்றில் பழமை வாய்ந்த கோவில்களில் ஆகம விதிகளை பின்பற்றை பூசைகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோவில்களில், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ தடை விதிக்க வேண்டும் என்று, அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம்(All India Adi Saiva Shivachariyar Sangam) உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணை :
முறையாக அர்ச்சகருக்கு படித்த நபர்களை தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
குழு அமைப்பதில் கருத்து வேறுபாடு :
ஆகம கோவில்களை(Agama Temple) கண்டறியும் குழுவில், உறுப்பினர் நியமனத்தில் தமிழக அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே கருத்து முரண் இருக்கிறது.எனவே, 'சர்ச்சைக்குரிய நபர்களை அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம்' என, தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலய சுவாமிகளை உறுப்பினராக நியமிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க : மோர்க்கார பெண்ணிற்கு மோட்சம் தந்த பெருமாள்-இத படிக்காம போகாதீங்க!
தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் கெடு :
குழு மூலம், ஆகம விதிகளை(Aagama Rules Temple) பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, பின்பற்றாமல் பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும். அந்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2026 ஜனவரிக்கு(Supreme Court Case) ஒத்தி வைத்தனர்.
==================