CHAMPIONS OF THE EARTH : சுப்ரியா சாகுவுக்கு ஐநா உயரிய விருது

கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐநாவின் உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருதினை பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.
Supriya Sahu has brought pride to Tamil Nadu by receiving the UN's highest award, Champions of the Earth
Supriya Sahu has brought pride to Tamil Nadu by receiving the UN's highest award, Champions of the Earth
2 min read

ஐநா உயரிய விருது

CHAMPIONS OF THE EARTH : ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இவ்விருது இயற்கை பாதுகாப்பில் அவர் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக இந்த உயரிய வழங்கப்பட்டு உள்ளது.

காலநிலை மாற்றம் - தமிழகம்

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் அவர் ஆற்றிய பணிக்கு விருதானது வழங்கப்பட்டு இருக்கிறது.

அரசின் முயற்சிகளில் - முழு பங்களிப்பு

சதுப்பு நிலம் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட அரசின் முயற்சிகளில் இவரது பங்களிப்பு அளப்பரியது.

பூமியின் வெற்றியாளர்கள்

சுற்றுச்சூழலுக்காக சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு இந்த விருதினை சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் ( பூமியின் வெற்றியாளர்கள் ) ஐநா வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த உயரிய விருதினை பெற்று இருப்பதன் மூலம், தமிழகத்தில் சுப்ரியா சாகு பெருமை சேர்த்து இருக்கிறார்.

யார் இந்த சுப்ரியா சாகு?

சுப்ரியா சாஹு , 27 ஜூலை 1968 இல் பிறந்த இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய நிர்வாக சேவையின் 1991 தொகுதியைச் சேர்ந்த ஒரு இந்திய அதிகாரி ஆவார். சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றியவர். இவர் ஆட்சியராக இருந்த போது தான், அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

முக்கிய பொறுப்புகளை வகித்தவர்

சுப்ரியா சாகு, தூர்தர்ஷன் டைரக்டர் ஜெனரல் ஆகவும், இன்கோசர்வ் முதன்மை செயல் அதிகாரியாகவும், சுகாதாரத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.

கூடுதல் தலைமைச் செயலாளர்

தற்போது, ​​அவர் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு தலைமை வகிக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஐநா விருதினை வென்றுள்ள சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ”தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் எர்த்' (பூமியின் வெற்றியாளர்கள்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது சுற்றுசூழலுக்காக சிறந்த பங்களிப்பை வழங்க கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் மிக உயரிய விருதாகும்.

தமிழகம் பெருமை கொள்கிறது

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது!. காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் அமைப்பின் Champions Of The Earth விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு சுப்ரியா சாகு அவர்களுக்கு எனது பாராட்டுகள்!

உயரிய விருது ஊக்கமளிக்கும்

ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், Plastic பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்."இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in