பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி : நயினார் நாகேந்திரன் வரவேற்பு

Actress Kasthuri Join Tamil Nadu BJP : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Tamil Actress Kasthuri, joined in Bharatiya Janata Party
Tamil Actress Kasthuri, joined in Bharatiya Janata Party
1 min read

நடிகை கஸ்தூரி :

Actress Kasthuri Join Tamil Nadu BJP : 'ஆத்தா உன் கோவிலிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

திமுகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சிக்கும் கஸ்தூரி, விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பவர் :

எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தனது குரலை பதிவு செய்து வந்தார். இதற்காக வழக்குகளையும் அவர் எதிர்கொண்டு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன், சென்னையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்காக தமிழக போலீசார் அவரை, ஐதராபாத் சென்று கைது செய்தனர்.

பாஜகவில் இணைந்தார் கஸ்தூரி :

இந்தநிலையில், நடிகை கஸ்தூரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி பாஜகவில்(Kasthuri Join BJP) தன்னை இணைத்துக்கொண்டார்.

நமீதா மாரித்துவம் பாஜகவில் இணைந்தார் :

அவருடன் பிக் பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும்(Namitha Marimuthu Join BJP) பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜகவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in