பொற்கால ஆட்சி தந்த காமராஜரை ‘பழிப்பதா’ : ஜி.கே. வாசன் எச்சரிக்கை

GK Vasan Condemns Trichy Siva on Kamarajar : பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறான தகவலை திருச்சி சிவா தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
Tamil Maanila Congress Leader GK Vasan Condemns DMK MP Trichy Siva About Kamarajar
Tamil Maanila Congress Leader GK Vasan Condemns DMK MP Trichy Siva About Kamarajar
1 min read

GK Vasan Condemns Trichy Siva on Kamarajar : காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திமுக எம்பி திருச்சி சிவா, பேசியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவெக, பாமக போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

பொற்கால ஆட்சி தந்தவர் காமராஜர் :

இந்தநிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்(GK Vasan) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் காமராஜர், அதனால்தான் இன்றும் அவரை போற்றுகிறோம். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக இறுதி மூச்சுவரை செயல்பட்டவர் காமராஜர்.

இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டி :

வருங்கால சமுதாயத்தினர் தங்களின் நல்வழிகாட்டியாக, முன் மாதிரியாக காமராஜரை(Kamarajar) ஏற்றுக் கொள்வது 100 சதவீதம் பொருத்தமானது. அப்படிப்பட்ட உயர்ந்த தலைவரான காமராஜரை பற்றி, திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, பொது வெளியில் தவறான தகவலை தந்ததை ஒருகாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

திருச்சி சிவா தவறான பேச்சு :

திருச்சி சிவாவின் பேச்சு(Trichy Siva About Kamarajar) வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது. அவரது பேச்சு ஒருகாலும் ஏற்புடையது கிடையாது. அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்ட இதுபோன்ற உன்னத தலைவரை, உத்தம தலைவரை, தமிழக மக்கள் நேசிக்கும் தலைவர் பற்றி திருச்சி சிவா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது” இவ்வாறு ஜி.கே. வாசன்(GK Vasan) கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in