TN Gen Z Voters : தமிழக அரியணை யாருக்கு? : முடிவு எடுக்கப் போகும் ஜென்ஸீ வாக்காளர்கள் : வளர்ச்சிக்கு முன்னுரிமை!

தமிழகத்தில் ஒரு கோடியே 18 லட்சம் ஜென்ஸீ வாக்காளர்கள், யார் ஆட்சியில் அமர்வது என்ற முக்கிய முடிவை எடுக்கும் சக்தியாக உருவெடுத்து இருக்கிறார்கள்.
Tamil Nadu, 1.18 crore Gen Z voters emerged major decision-making force in deciding who will come to power
Tamil Nadu, 1.18 crore Gen Z voters emerged major decision-making force in deciding who will come to powergoogle
2 min read

ஜென்ஸீ தலைமுறை

ஜென் இசெட்(Gen Z) என்பது பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களை குறிக்கும் ஒரு தலைமுறை ஆகும். சிறுவயதில் இருந்தே இணையம், ஸ்மார்ட்போன் பயன்படுத்தியவர்கள்.

சோஷியல் மீடியாவில் அதிகமாக செயல்படுபவர்கள். 2013 முதல் பிறந்தவர்களை ஜென் ஆல்பா (Gen Alpha) என கூறுகின்றனர்.

வேலை, கல்வி, வளர்ச்சி

முந்தைய தலைமுறைகளை போல ‘பாரம்பரிய அரசியல், விசுவாசம்’ போன்றவை மட்டும் இல்லாமல், ஜென் இசெட் வாக்காளர்கள், ‘வாய்ப்புகள், வேலை, கல்வி, நம்பிக்கை’ போன்ற அம்சங்களின் அடிப்படையில் முடிவு செய்கிறார்கள்.

புரட்சிக்கு வித்திட்ட இளம் தலைமுறை

இலங்கை, நேபாளம், வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் ஜென்ஸீ வாக்காளர் எடுத்த முடிவே ஆட்சியை புரட்டி போட்டது. ஊழல், திறனற்ற அரசுக்கு எதிராக இவர்கள் முன்னெடுத்த போராட்டங்களும் புரட்சியை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் பேசு பொருளாகின.

தமிழகத்தில் 1.18 கோடி பேர்

எனவே, இந்த தலைமுறை வாக்காளர்களின் முடிவு தமிழக சட்டசபை தேர்தலில் எதிரொலிக்க போகிறது. ஏனென்றால், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம் என்பதால், இவர்களை வாக்குகள் வெற்றி என்ற இலக்கை எட்ட அவசியம் தேவைப்படுகிறது.

சமூக ஊடகங்கள் இளம் தலைமுறையின் முகமாக இருப்பதால், அரசியல் கட்சிகளும் தங்களின் பிரசாரத்தில் டிஜிட்டல் தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன.

டிஜிட்டல் பிரசாரம்

திமுக தற்போது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் டிஜிட்டல் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இதனால், தொடர்ச்சியான ஆட்சி, மேம்பாடு என்ற முழக்கத்தால் சில ஜென் இசெட் வாக்காளர்களை ஈர்க்கும் வாய்ப்புள்ளது.

இளம் வாக்காளர்கள் - கட்சிகளின் கணக்கு

நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார வாக்குறுதிகள் மூலம் இளைஞர்களை அணுகவும் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் நிலையில், இதை ஆட்சிக்கு வந்தால் 10 சதவீதமாக உயர்த்தப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்து இளைஞர்களை ஈர்த்து இருக்கிறது.

திமுகவும் கல்லூரி செல்லும் இளைஞர்கள், இளம்பெண்களை மனிதில் வைத்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருக்கிறது.

பாஜகவின் அண்ணாமலைக்கு இளம் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. இவரது பேச்சு, சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருப்பது போன்றவை இளம் வாக்காளர்களை கவர்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம்

முன்பு எப்போதும் இல்லாமல் நடிகர் விஜயின் வருகை, இளைஞர்களிடையே புதிய அரசியல் ஆர்வம் உருவாகியுள்ளது. குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அதிக கவனம் பெற்றுள்ளது.

நாம் தமிழர் சீமான்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தமிழ் அடையாளம், இயற்கை, விவசாயம் போன்ற உணர்வு பூர்வமான கருத்துகளால் இளைஞர்ளை ஈர்த்து வருகிறது. இலவசங்களே இல்லாத சீமானின் வாக்குறுதிகளை ஜென்ஸீ வாக்காளர்களை ஈர்த்து இருக்கிறது.

வெற்றி, தோல்வி இவர்கள் கையில்

முதல்தலைமுறை வாக்காளர்கள் ஒரே கட்சிக்கு வாக்களிப்பது என்பது சாத்தியம் இல்லை என்றாலும், இவர்களின் கூடுதல் வாக்குகளை பெறும் கட்சி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும்.

ஜென்ஸீ வாக்காளர்களின் எதிர்பார்ப்பு

ஒரு பகுதியினர் ஆட்சி தொடரவும். இன்னோரு பகுதியினர் மாற்றத்தை நோக்கியும், மற்றொரு பகுதியினர் புதிய அரசியலை எதிர்பார்த்து வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் ஜென்ஸீ வாக்களர்கள் முக்கிய அரசியல் சக்தியாக, எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறவர்களாக இருக்க போகிறார்கள் என்பதில் ஐயமில்லை.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in