

2026-27: Tarpaulins worth ₹10 crore, Cotton Revival Mission – Key Announcements!
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார். பட்ஜெட்டில் விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்கவும், பயிர் உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
1. விளை பொருட்களைப் பாதுகாக்க ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள்
அரசு கொள்முதல் கிடங்குகளுக்கு கொண்டு வரப்படும் வேளாண் விளைபொருட்கள் எதிர்பாராத மழையினால் பாதிக்கப்பட்டு சேதமடைவதைத் தடுப்பதற்காக ரூ.10 கோடியில் தார்ப்பாய்கள் வழங்கப்பட உள்ளது.
தானிய பாதுகாப்பு உணவுப் பாதுகாப்பு
'தானிய பாதுகாப்பு உணவுப் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான தார்ப்பாய்கள் வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் வினோத் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
2. பயறு, எண்ணெய்வித்து
பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் தன்னிறைவு அடையும் பொருட்டு சிறப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.203.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்
மாநிலத்தில் பருத்தி உற்பத்தியை வெகுவாகப் பெருக்கிட 'பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்' புதிதாகக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. திரவ உயிர் உர உற்பத்தி மையங்கள்
விவசாயத்திற்கு தேவையான திரவ உயிர் உரங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், உற்பத்தி மையங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் வேளாண் பட்ஜெட்டில் ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் : ’விவசாயிகளுக்கு ரூ.4000 சிறப்பு ஊக்கத்தொகை’ : ’நம்மாழ்வார், அஞ்சலை அம்மாள்’ பெயரில் விருதுகள்...!
======