தமிழக சட்டமன்ற தேர்தல் உலகத்திற்கே முன்னுதாரணம்: இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்!

Chief Election Commissioner Gyanesh Kumar about TN Election 2026 : தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly elections 2026 are an example for the world Says Gyanesh Kumar Election Commissioner of India
Tamil Nadu Assembly elections 2026 are an example for the world Says Gyanesh Kumar Election Commissioner of India source:google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

Chief Election Commissioner Gyanesh Kumar about TN Election 2026 : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுக்கு , இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழ்நாட்டின் பெருமை

தமிழ்நாடு சிறப்பான ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலம் என்றும், உலக அளவில் தேர்தல் ஆணையர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், தமிழர்களின் குடவோலை முறை பற்றி கூறியதாகவும், அதைக்கேட்ட உலக நாடுகளின் தேர்தல் ஆணையர்கள் வியந்து பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயக திருவிழா

மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான் என்றும் அதனால் இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து ஜனநாயக திருவிழாவை கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2 நாள் ஆலோசனை

கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில், காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்திய தாகவும், தற்போது தமிழகத்தில் 5 கோடியே 67 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும், தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 12,21,713 , பெண் வாக்காளார்களின் எண்ணிக்கை 75,032 என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாகவும் உள்ளதாக கூறினார்.

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 1.05 கோடி என்றும் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 5 ஆயிரம் என்றும், 100 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,530 என்றும் தெரிவித்தார்.

வாக்குச்சாவடி விவரம்

மேலும் வாக்குசாவடிகள் குறித்த கூடுதல் விவரங்களையும் கூறினார். அதன்படி 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. எந்த வாக்கு சாவடியிலும் 1200 மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

வேட்பாளர் புகைப்படம்

மின்னனு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் வண்ணப் புகைப்படங்களாக இருக்கும் . அதனால் வேட்பாளர்களை அடையாளம் காண்பது வாக்காளர்களுக்கு எளிமையாக இருக்கும் என்றார்.

தபால் வாக்கு எண்ணிக்கை

தபால் வாக்குகள் கடைசி இரண்டு மின்னனு வாக்கு எந்திரங்களில் வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பு எண்ணி முடிக்கப்படும் .

2 மணி நேரத்திற்கு ஒருமுறை

வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தாலும், வாக்கு வித்தியாசம் தோன்றினாலும் விவிபேடில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கு முன்னுதாரணம்

மேலும் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல் உலகத்திற்கே முன்னுதாரணமாக இருக்கும் என்றும் செய்தியாளர்களிடையே பேசும்போது தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in