சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்: தமிழகம் வரும் தேர்தல் ஆணையர் குழு

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி, ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குழு விரைவில் சென்னை வருகிறது.
Tamil Nadu Assembly elections approaching, a team from the Chief Election Commissioner of India will soon be arriving in Chennai to discuss preparations
Tamil Nadu Assembly elections approaching, a team from the Chief Election Commissioner of India will soon be arriving in Chennai to discuss preparations
1 min read

தமிழக அரசியல் களம்

Tamil Nadu Assembly elections approaching, a team from the Chief Election Commissioner of India will soon be arriving in Chennai to discuss preparations : தமிழக சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து களத்தில் வேகம் காட்டி வருகின்றன. குறிப்பாக கூட்டணி தொடர்பான முடிவுகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என போட்டி இருக்கும்.

தயாராகும் வாக்காளர் இறுதிப் பட்டியல்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு போன்ற பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், இளைஞர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிப்போர் மத்தியில் தேர்தல் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆட்சி தொடருமா? புதிய அரசா?

ஆட்சி தொடருமா அல்லது புதிய அரசா என்ற கேள்விகளுடன், தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஆணையர் குழு வருகை

தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக தேர்தல் ஆணையர் குழு ஆலோசனை மேற்கொள்ளும்.

தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை

மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நேரடியாக ஆலோசனை நடத்த இருக்கிறது.

தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை

தேர்தல் சவால்கள், பதற்றமான தொகுதிகள், வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in