தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி , தேர்தல் படைக்கும் படை அதிகாரிகள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓய்க்கிறது பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பல நாட்களாக அனைத்து கட்சிகளுக்கும் தீவிர முனைப்புடன் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.
தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள்
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் , அதிமுக அதன் கூட்டணி கட்சிகளும் , அவர்களை ஆதரித்து மோடி , அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா போன்ற மத்திய அமைச்சர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
1200 கோடி ரூபாய் பறிமுதல்
இதுவரை பணம், தங்கம், போதைப்பொருள் மற்றும் மதுபானம் உள்ளிட்ட சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்
தேர்தல் ஆணையம் தகவல்
இதில் குறிப்பாக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் இதர ஆபரணம் போன்ற பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வருமான வரித்துறையில் கைப்பற்றியது
தேர்தல் பறக்கும் படையினர் உதவியுடன் ,வருமான வரித்துறை மட்டும் சுமார் 190 கோடி ரூபாயைக் கைப்பற்றியுள்ளது, அதே சமயம் சி.ஜி.எஸ்.டி பிரிவு 175 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது.
குறிப்பாக சென்னை, ஓசூர் மற்றும் சேலம் போன்ற பகுதிகளில் வாக்காளர்களுக்குக் கூப்பன்கள் மற்றும் இலவசப் பொருட்களை விநியோகிக்கும் முயற்சிகள் கண்டறியப்பட்டு, அவை முறியடிக்கப்பட்டுள்தாகவும் தெரிவித்துள்ளது
நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தவே இந்த சோதனை
இந்த அதிரடி சோதனைகள் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முதலிடத்தில் திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, இதற்கு அடுத்தபடியாகத் தலைநகர் சென்னை இரண்டாம் இடத்தில் இருப்தாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
============