தமிழ்நாடு : 65 நாட்களில் தேர்தல்?: ஏப்ரல் கடைசியில் வாக்குப்பதிவு!

தமிழகத்தில் ஏப்ரல் மாதமே சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu BJP executives said that there is possibility of holding assembly elections in TN April itself
Tamil Nadu BJP executives said that there is possibility of holding assembly elections in TN April itselfGoogle
1 min read

ஐந்து மாநிலத் தேர்தல்

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்களும் தமிழகத்தை போலவே சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதலில் வாக்குப்பதிவு

இந்தநிலையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கக்கூடிய முதற்கட்டத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக ஆலோசனை

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில், பாரதிய ஜனதா சட்டமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தேர்தலுக்கு 65 நாட்கள் தான்

பொறுப்பாளர்கள் இடையே உரையாற்றிய பி.எல். சந்தோஷ், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 65 நாட்களே உள்ளது என்றும், அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல்

ஏப்ரல் மாதமே தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்தலுக்கு தீவிரமாக தயாராக வேண்டும் என்று பி.எல். சந்தோஷ் தெரிவித்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என்றே பாஜக தலைவர்கள் முன்னிலைப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்றும் பேசியதாக தெரிகிறது.

அதன்படி பார்த்தால், ஏப்ரல் மாதம் பள்ளித் தேர்வுகள் முடிந்த உடன் கடைசி வாரம் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in