தமிழ்நாடு பட்ஜெட்: ரூ.3.50 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை! துறை வாரியான ஒதுக்கீடுகள், முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் கல்வி, மகளிர்க்கான 8 கிராம் தங்கம், AI நகரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு.
Tamil Nadu Budget: Budget presented for ₹3.50 lakh crore! Department-wise allocations, key highlights! Full details!
Tamil Nadu Budget: Budget presented for ₹3.50 lakh crore! Department-wise allocations, key highlights! Full details!ai
2 min read

தமிழகச் சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான திருத்திய பொது பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

இம்முறை மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.3,50,027 கோடி ஆகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,26,740 கோடி ஆகவும் கணிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் முக்கிய திட்டங்கள்

1. மாணவர்கள் மற்றும் கல்வித் துறை

வெற்றி மடிக்கணினி திட்டம்: மாணவர்களுக்கு 'வெற்றி மடிக்கணினி' வழங்​க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளைச் சீரமைக்க ரூ.2,132 கோடியும், நவீனமாக்க ரூ.300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம்: 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

விளையாட்டுப் பயிற்சி: பள்ளிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தர பயிற்சி அளிக்க ரூ.5 கோடி.

நவீன மிதிவண்டிகள்: பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில் வசதி கொண்ட சைக்கிள்கள் வழங்க ரூ.277 கோடி ஒதுக்கீடு.

2. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலன்

அண்ணன் சீர் திட்டம்: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுச்சேலை வழங்கும் இத்திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.

தாய் கேர் திட்டம்: கருவுற்ற பெண்களுக்கான தாய் சேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு.

மண்ணின் மகள் திட்டம்: இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் நலன்: நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்களுக்கு ரூ.33 கோடியும், 12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. கால்நடை பராமரிப்பு & மீன்வளம்:

கறவை மாடுகள்: ரூ.57 கோடி செலவில் 10,000 இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்.

வெற்றி ஆடுகள் வளர்ப்பு: வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு.

கால்நடை மருத்துவம் மற்றும் காப்பீடு: கால்நடை மருத்துவச் சேவைகளுக்கு ரூ.122 கோடியும், 'கால்நடைகள் காப்போம்' திட்டத்திற்கு ரூ.31 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர் நலன்: மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீனவர் நல உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

4. உட்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் மின்சாரம்

வெற்றி வீடு திட்டம்: ஏழை எளிய மக்களுக்குத் தரமான வீடுகள் வழங்கும் 'வெற்றி வீடு திட்டம்' ரூ.3,500 கோடியில் அறிமுகம். அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பு திட்டங்களுக்கு ரூ.1,253 கோடி ஒதுக்கீடு.

நம்ம சாலை திட்டம்: சாலை மேம்பாட்டிற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு.

மின்சார வாகனங்கள் : பொது இடங்களில் 20,000 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ.50 கோடியும், குடியிருப்பு பகுதிகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்க ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மின் பகிர்மானம்: சென்னையில் மின் பகிர்மான திறனை வலுப்படுத்த ரூ.1,390 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. தொழில்நுட்பம் மற்றும் பொது நிர்வாகம்

இந்தியாவின் முதல் AI நகரம்: 'அறிவகம்' என்ற பெயரில் இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு நகரம் அமைக்க சாத்தியக்கூறுகளை ஆராய ரூ.5 கோடி ஒதுக்கீடு.

இ-சேவை 2.0: மாநிலத்தின் அனைத்து இ-சேவை மையங்களும் 'இ-சேவை 2.0' ஆகத் தரம் உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்கள்: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.838 கோடியும், ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.47,240 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா: மாமல்லபுரத்தைச் சர்வதேசச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், ஓகேனக்கல், வைகை, தாமிரபரணி ஆறுகளில் நதிச் சுற்றுலா மேம்பாட்டிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in