முழுமை பெற்றது தமிழக அமைச்சரவை : 35 பேர், TVK 31, காங்கிரஸ் 2, விசிக 1, ஐயுஎம்எல் 1 : துறைகள் முழு விவரம்...!

தமிழக அமைச்சரவை 2வது முறை விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மொத்தம் 35 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.
Tamil Nadu cabinet expanded for the second time,  total of 35 people become ministers
Tamil Nadu cabinet expanded for the second time, total of 35 people become ministersgoogle
2 min read

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு 2 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. முதன்முறையாக கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கின்றன.

அமைச்சரவை - 35 அமைச்சர்கள்

அதன்படி, தவெக சார்பில் 31 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர், விசிகவில் இருந்து ஒருவர், ஐயுஎம்எல் மூலமா ஒருத்தர் என்று, அமைச்சர்கள் பொறுப்பேற்று இருக்கிறார். இந்தநிலையில், தமிழக அமைச்சர்கள், அவர்களின் இலாகா விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

அமைச்சர்கள்-இலாகா விவரங்கள் :

1. முதல்வர் விஜய் - பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம்..

சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வாழ்வாதாரம், இளைஞர் நலன், குழந்தைகள், மூத்தோர், மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்.

2. என்.ஆனந்த் - ஊரக வளச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், பாசனத் திட்டங்கள்

3. சி.டி.ஆர்.நிர்மல்குமார் - மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள், பாஸ்போர்ட்.

4. கே.ஏ.செங்கோட்டையன் - வருவாய், மாவட்ட வருவாய் அமைப்புகள், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதானம், கிராமதானம், சட்டப்பேரவை

5. ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி, நெடுஞ்சாலை,விளையாட்டு.

6. கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரம்

7. பி.வெங்கடரமணன் - உணவு

8. ராஜ்மோகன் - பள்ளிக்கல்வி, செய்தி

9. டி.கே.பிரபு - இயற்கை வளங்கள்

10. எஸ்.கீர்த்தனா - தொழில் துறை

11. ஸ்ரீநாத் - மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம்

12. கமலி.எஸ் - கால்நடைத் துறை

13. சி.விஜலட்சுமி - பால்வளம்

14. ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனம்

15. வினோத் - வேளாண்மை, தோட்டக்கலை, சர்க்கரை, பயன்பாடற்ற நில மேம்பாடு

16. ராஜீவ் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்

17. பி.ராஜ்குமார் - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, சிஎம்டிஏ, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

18. வி.காந்திராஜ் - கூட்டுறவு

19. மதன்ராஜா.பி - குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை

20. ஜெகதீஷ்வரி.கே - சமூக நலம், பெண்கள் அதிகாரம்

21. ராஜேஷ்குமார்.எஸ் - சுற்றுலா

22. எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, துணிநூல், காதி

23. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி - வணிகவரி, பதிவு

24. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - போக்குவரத்து

25. ரமேஷ் - இந்து சமய அறநிலையங்கள்

26. பி.விஸ்வநாதன் - உயர்கல்வி

27. குமார்.ஆர் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள்

28. தென்னரசு.கே - வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்

29. வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்

30. முகமது பர்வேஸ் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு

31. டி.சரத்குமார் - மனித வள மேலாண்மை

32. என்.மரியவில்சன் - நிதி, ஓய்வூதியம், திட்டம், வளர்ச்சி

33. விக்னேஷ்.கே - மதுவிலக்கு, ஆயத்தீர்வை

34. வன்னி அரசு - சமூக நீதித்துறை

35. ஷாஜகான் - சிறுபான்மையினர் நலத்துறை

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in