தமிழக முதல்வர் விஜய் அதிரடி! 717 மதுபான கடைகளை மூட உத்தரவு: முழு விவரம்!

தமிழகத்தில் 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுக்கடைகளை இரண்டு வாரத்தில் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Tamil Nadu Chief Minister Vijay Takes Bold Action! Orders Closure of 717 Liquor Shops: Full Details!
Tamil Nadu Chief Minister Vijay Takes Bold Action! Orders Closure of 717 Liquor Shops: Full Details!source: google
1 min read

தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு

தமிழக முதல்வர் விஜய் ஒரே உத்தரவில் 717 மதுக்கடைகளை மூட ஆணையிட்டுள்ளார். இதற்கு முன்பு அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இது எவ்வளவு பெரிய உத்தரவு தெரியுமா? விரிவாக பார்க்கலாம் வாங்க!

இரண்டு வாரத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுக்கடைகளை இரண்டு வாரத்தில் மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதில் வழிபாட்டுத் தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 255 கடைகள் அடங்கும்.

மூன்றாவது நாளிலேயே அதிரடி காட்டும் முதல்வர் விஜய்

கடந்த காலங்களை விட, மிகக் குறுகிய காலத்தில் அதாவது ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே இத்தனை கடைகளை மூட உத்தரவிட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் மொத்தமாக 1000 கடைகள் மூடல்

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தை எடுத்துக்கொண்டால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதிப்படி படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். ஒட்டுமொத்தமாக 2016 முதல் 2021 வரை இரண்டு கட்டங்களாக மொத்தம் 1,000 கடைகள் மூடப்பட்டன.

திமுக ஆட்சியில் 500 கடைகள் மூடல்

அதேபோல், கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதற்கட்டமாக 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்த வரிசையில் தற்போது முதல்வர் விஜய், நேரடியாக 717 கடைகளை இலக்கு வைத்திருப்பது ஒரு மிகப்பெரிய நிர்வாக ரீதியிலான பாய்ச்சலாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த அதிமுக, திமுக ஆட்சிகளில் 500, 500 என டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், இப்போது முதல் உத்தரவிலேயே 717 கடைகள் அதுவும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே மூடப்படுவது பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in