தமிழ்நாடு காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் , முதல்வர் விஜய் உறுதி , வலுப்பெறும் தமிழ்நாடு காங்கிரஸ்!

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து மாநிலங்களவை இடம் கேட்டதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Tamil Nadu Congress gets Rajya Sabha seat, CM Vijay confirms,
Tamil Nadu Congress gets Rajya Sabha seat, CM Vijay confirms,google
1 min read

காலியாக இருக்கும் இடத்திற்கு தேர்தல்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகம், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த நிலையில், காலியாக இருக்கும் இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிப்பானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

விஜய்யை சந்தித்த காங்கிரஸ் மேலிடம்

தலைமைசெயலகத்தில் இன்று விஜயை சந்தித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலரும் மேலிடப் பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர், மாநிலங்களைவையில் சீட் வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்

பரிசீலனை செய்வதாகவும் உறுதியளிப்பு

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிரிஷ் சோடங்கர் மாநிலங்களைவையில் சீட வழங்க முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் , அதனை முத்லவ்ர் விஜய் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார் என்றும் தெரிவித்திருந்தார்

சீட் வழங்க உறுதியளித்த முதல்வர் விஜய்

இம்மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது

தவெக இடம்பெறும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி

நாடளுமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து , தவெகவிற்கு அந்த சீட வழங்கபடுமா என்ற நீண்ட எதிர்ப்பார்பு நிலவி வண்டஹ் நிலையில், அதற்கு முற்றுபுள்ளி வைத்து இருக்கிறது தமிழக வெற்றி கழகம் .

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in