தமிழ்நாடு தேர்தல் 2026 பரப்புரைக்காக தமிழகம் வரும் ராகுல்காந்தி: காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்!

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Election 2026.. Rahul Gandhi to visit Tamil Nadu for first time for campaigning:
Tamil Nadu Election 2026.. Rahul Gandhi to visit Tamil Nadu for first time for campaigning:google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலின் வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ,அனைத்து கட்சிகளுக்கும் தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகம் வரும் ராகுல் காந்தி

இந்த நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கருத்து வேறுபாடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியானது போட்டியிடுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ராகுல் தமிழகத்திற்கு வருகை தராதது அரசியல் வட்டாரங்களில் பெரும் வாதத்தை ஏற்படுத்தி வந்தது.

மேலும் கூட்டணையில் பங்கீட்டில் தொடர் இழுபறியானது நீடித்து வந்தது, இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பமானது நீடித்து வந்திருந்தது.

முரண்பாட்டிற்கு இடையே தமிழகம் வரும் ராகுல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ராகுல் தமிழகம் வராத நிலையில், கூட்டணிக்குள் முரணப்படானது நிலவி வந்தது, ,ஒரே பிரச்சாரத்திலும் கூட ஸ்டாலின் மற்றும் ராகுல் ஒருவரையொருவர் சந்த்தித்து பேசததும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்து.

இந்த முரண்பாட்டிற்கு நடுவே தமிழகத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள ராகுல் தமிழகம் வருகிறார்.

வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

வரும் சனிக்கிழமை காலை பொன்னேரி மற்றும் சோளிங்கரில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சனிக்கிழமை மாலை துறையூரில் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ஒரே நாளில் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் ராகுல் காந்தி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பங்கேற்கிறார்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in