தேர்தல் 2026 : தமிழ்நாடு முழுவதும் 5.73 கோடி வாக்காளர்கள் : முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் : தேர்தல் ஆணையம்

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் , தேர்தல் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்தார்
Tamil Nadu Elections; 5.73 crore voters across Tamil Nadu. 14.59 lakh first-time voters - Election Commission
Tamil Nadu Elections; 5.73 crore voters across Tamil Nadu. 14.59 lakh first-time voters - Election Commission google
1 min read

சட்டமன்ற தேர்தல் 2026

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கிறது .இந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முக்கிய தகவல்களை , தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஓய்ந்த பிரச்சாரம்

சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட வந்த நிலையில் , நேற்றுடன் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி முடிவடைந்தது.

4.18 லட்சம் தபால் வாக்குகள்

தேர்தல் அதிகாரியின் தகவலின் படி தமிழ்நாடு முழுவதும் 5.73 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும் . அவர்களில் முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் இருப்பதாகவும், இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

5,949 பதற்றமான வாக்கு சாவடிகள்

75,064 வாக்குச்சாவடி மையங்களில் 1,06,480 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ,தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

85,875 காவலர்கள் பாதுகாப்பு பணியில்

பாதுகாப்பிற்காக 300 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளன. 85,875 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட பட இருப்தாகவும் , தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரூ.1,262 கோடி பணம் பறிமுதல்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ.543 கோடி பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் . ரூ.719 கோடி பணம், பொருட்கள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச்செல்ல அனுமதியில்லை; எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் செல்போனை வெளியே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in