

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்
TAPS New Pension Scheme in Tamil Nadu : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் ( உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் - TAPS ) மீண்டும் அமல்படுத்தப்படும் என்று, கடந்த 3ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
அரசாணை வெளியீடு
அதன்படி, ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் வருமாறு
* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டத்தின்படி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
* 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
* அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.
* ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
* 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும்.
* பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும்.
* ஓய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்கப்படும்
* பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்துவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
* TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
* இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் அரசின் பங்களிக்காக வழங்க வேண்டும்.
* பங்களிப்பு தொகை ஊழியர்களின் வருமானத்திற்கு ஏற்ப ஆண்டுதோறும் உயரும்.
* உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை ஜனவரி 1 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
* மேலும் ஜனவரி 1க்கு முன்பு பணியில் இருப்பவர்கள் ஒய்வுபெறும் போது TAPS அல்லது CPS ஐ தேர்வு செய்யலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
================