”மின் வாரியத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு” : தமிழக அரசு அதிரடி அறிவிப்பு, கோரிக்கை நிறைவேற்றம், ஊழியர்கள் மகிழ்ச்சி..!

மின்சார வாரியத்தில் ஒரே நேரத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
Tamil Nadu government issued  order granting promotions to 700 employees in Electricity Board
Tamil Nadu government issued order granting promotions to 700 employees in Electricity Board AI generated
1 min read

மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை

The Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) promoted 700 Assistant Engineers (Electrical) to Assistant Executive Engineers in a major reshuffle.

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கோரிக்கை நிலுவையில் இருந்தது.

உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு

இந்நிலையில், உதவி பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

700 பேருக்கு பிரமோஷன்

அவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2012-ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 700 உதவி பொறியாளர்களுக்கு. உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் இந்த வெளிப்படையான நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஆணை வெளியீடு

அதற்கான கோப்பில் துறை அமைச்சர் நிர்மல் குமார் கையெழுத்திட்டார். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வு வழங்கிய தவெக அரசுக்கு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேம்படுத்தப்படும் மின்சார வாரியம்

இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும்.

தங்கு, தடையின்றி மின்சாரம்

பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in