

Tamil Nadu government's interim budget that an additional 1 lakh houses will be built under the Kalaignar Kanavu Illam project : தமிழக அரசின் 2026 -27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்களை பார்க்கலாம் :
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும்
* இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு
* தமிழகத்தில் 5,40,511 மாணவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு
* கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி
* உயர் கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி
* சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி
* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடி
* மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடி
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன்
* நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயன்
* மின்னணு துறை உற்பத்தியில் 41% பங்களிப்பு, தமிழகம் முதலிடம்
* செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு
* 11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்
* பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைப்பு
இவ்வாறு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தார்.
====================