தமிழகம் : 8 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும்;வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
c
ட்google
1 min read

தமிழகம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

 தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (ஜூலை 28 வரை) வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு (ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை) அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2°C முதல் 4°C வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது.

எல்நினோ மற்றும் தென்மேற்கு பருவமழையில் ஏற்ப்பட்ட மாற்றமே காரணம்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் காலநிலை மாற்றத்திற்கு வெப்பநிலை அதிகரிப்பிற்கு தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட சுணக்கம், வறண்ட வானிலை மற்றும் கடல்காற்று தாமதமாவது ஆகியவையே முக்கிய காரணங்கள் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வளிமண்டலத்தில் ஏற்ப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை

மேலும் சராசரி கடல் மட்டத்தில் குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. அதே நேரம் தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருவதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

மழை பெரும் மாவட்டங்கள்

இந்த சூழலில் ,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

=================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in