காரைக்குடி தேர்தல் பிரச்சாரம்: தாமதமாக வந்த விஜய் ; பரப்புரை சாலைவளமாக மாற்றம் , தொண்டர்கள் ஏமாற்றம்

TVK Vijay Campaign in Karaikudi : காரைக்குடி தேர்தல் பரப்புரை பிரசாரத்தில் இன்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்றார் விஜய்
Tamil Nadu tvk Vijay arrived late for Karaikudi election campaign; Campaigning turned into a roadshow,
Tamil Nadu tvk Vijay arrived late for Karaikudi election campaign; Campaigning turned into a roadshow, google
1 min read

நேர தாமதம் , பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

TVK Vijay Campaign in Karaikudi : காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம்

அனுமதிருந்த நேரத்தை விட தாமதமாக சென்ற நிலையில் அவருக்கு அனுமதியானது மறுக்கப்பட்டது ,

பரப்புரையை ,சாலைவளமாக மாற்றிய விஜய்

தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்த நேரத்தை விட தாமதமாக வந்த விஜய்க்கு பரப்புரைக்கு அனுமதியானது மறுக்கப்பட்டது. எனவே தனது பரப்புரையை சாலை வளமாக மாற்றிய பரப்புரை வாகனத்தில் கையசைத்து சென்றார் .

காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம்

பலமணி நேரமாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை காண தொண்டர்கள் , பொதுமக்கள் காத்திருந்த நிலையில் ,கால தாமதம் காரணமாக அவர் மக்களிடம் உரையாடாமல் சென்றுவிட்டார்.

இதனால் பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் பேசாமல் சென்றதற்கு ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தனர்

தொண்டர்கள் சூழ விஜய் வருகை

மதுரையில் இருந்து காரைக்குடி வருவதற்க்கு உள்ள 90 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க விஜய்யின் வாகனம் 4 மணி நேரத்தும் மேல் எடுத்துக்கொண்டது , வழிநெடுகிலும் அவரின் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடர்ந்து வந்தனர் .

இதனால் விஜய், காரைக்குடிக்கு மதியம் 2.30 மணிக்கு மேல்தான் வந்தார். விஜய் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய நண்பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in