”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கடைசி இடம்” : நெல்லை பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை : உயர்கல்வி அமைச்சர் புறக்கணிப்பு..!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
Tamil Thai Vazhthu' relegated to the last spot: Disrespect shown at Nellai convocation ceremony
Tamil Thai Vazhthu' relegated to the last spot: Disrespect shown at Nellai convocation ceremonygoogle
1 min read

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கடைசி இடம்

 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டு , தமிழத்தாய் வாழ்த்து கடைசி இடத்திற்கு தள்ளபட்டுள்ளது

பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வித் துறை அமைச்சர்

இன்று நடைப்பெறவிருந்த நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர்கல்விதுறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு செய்துள்ளார் .

இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசு உத்தரவுப்படி வந்தே மாதரம் முதலில் பாடப்படும்; 2-வதாக தேசிய கீதம்; 3-வதாக மட்டுமே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்” என்று பல்கலைக் கழக துணை வேந்தர் சந்திரசேகர் அறிவித்தது பெரும் சர்ச்சையான நிலையில் உயர்கல்விதுறை அமைச்சர் விழாவை புறக்கணித்தார்.

ஆளுநர் கையால் பட்டம் வாங்காமல் போனதற்கு மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு

முனைவர் பட்ட ஆய்வாளர்கள் , மாணவர்கள் என அனைவரும் பட்டம் பெரும் நிலையில் , தங்க பதக்கம் பெற்றவர்கள் மட்டுமே ஆளுநர் கையால் பட்டம் பெற முடியும் என்று தெரிவித்திருந்தனர்

பல்கலைகழக்த்தின் இந்த அறிவிப்பிற்கு முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது , பலர் வேதனையோடு கண்கலங்கி நின்றனர்

கடும் குழப்பத்திற்கு பிறகு தொடங்கிய பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் பட்டமளிப்பு விழாவானது கடும் குழப்பம் மற்றும் எதிர்ப்ப்புகளுக்கு இடையே அனைவருக்கும் ஆளுநர் கையால பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்தது.

மேலும் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டு ,தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in