குற்றங்களுக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் , முதல்வர் விஜய்க்கு தமிழிசை கேள்வி

தேர்தல் பிரச்சார கள மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்
Tamilisai asks Chief Minister Vijay to take action on wartime basis
Tamilisai asks Chief Minister Vijay to take action on wartime basis google
1 min read

பிரச்சாரம் மனநிலையில் இருந்து முதல்வர் வெளிவர வேண்டும்

தவெக தலைவர் விஜய் ,மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சி கிழக்கிறகு சென்றிருந்தார் அங்கு அவர் மக்களிடையே உரையாற்றியிருந்ததிற்கு

, விஜய் தேர்தல் பிரச்சார மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்

அதிகரிக்கும் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர்ந்து இது குறித்து பேசிய தமிழிசை அவர்கள் ,மக்கள் உங்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்த்துகளையும் கொடுத்துள்ளார்கள். உடனே, போர்க்கால அடிப்படையில் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ,

நான் கோயம்பேடு வழியாகத்தான் வந்தேன். கார் ஏற்றி, இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, முதலவராக நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்

எதிர்கட்சி என்றால் அப்படித்தான் பேசுவார்கள் , முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்சி நன்றி தெரிவிக்கும் கூட்டதில் பேசிய விஜய் ,6 மாதம் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார் ,

இதற்கு தமிழிசை எதிர்க்கட்சிகள் என்றால் அப்படி சொல்லத்தான் செய்வார்கள். முதல்வராக நீங்கள் தான் பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

புதிய அரசாக இன்னும் வேலையை தொடங்கவே இல்லை , தமிழிசை குற்றச்சாட்டு

வேறு கட்சியில் இருந்து மற்றவர்களை சேர்க்கும் கவனத்தை தவெக அரசு செய்து கொண்டிருக்கிறது .மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் நிலைமையை பார்த்தால் ,தமிழ்நாட்டில் இந்த புதிய அரசு இன்னும் வேலையைத் தொடங்கவே இல்லை. பிளாக் ஒயிட்டில் இருப்பதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் முழுவதும் பிளாக்காக ஆகிவிடக் கூடாது" என்று தமிழிசை முதல்வர் விஜய்யை சாடியுள்ளார்.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in