”தவெக”வோடு கூட்டணி: வலியுறுத்தும் காங்கிரஸ் நிர்வாகிகள்!

TVK Congress Alliance 2026 : தவெக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Assembly Elections 2026: Alliance with Tvk: Congress executives insist!
Assembly Elections 2026: Alliance with Tvk: Congress executives insist!source:google
2 min read

தவெக- வுடன் கூட்டணி?

TVK Congress Alliance 2026 : தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தவெக- வுடன் கூட்டணி பேச்சைத் துவங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட தலைவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

கூட்டணியில் குழப்பம்

முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்று பேசிய நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசியிருந்தனர்.

முதல்வர் பேச்சைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளிடையே இதுதொடர்பான பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் ட்வீட்களும் , தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்தான முன்னெடுப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதை பறைசாற்றும் விதமாகவே இருந்து வருகிறது.

விஜயுடன் பேச்சுவார்த்தை

இதனால் அரசியல் வட்டாரங்களில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்புள்ளதாகவும் தவெக கட்சித் தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய கூட்டம்

நேற்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் கே, விஜயன், ராதாகிருஷ்ணன், என். முருகானந்தம், எஸ்.வி.ரமணி, கே. தணிகாசலம், நசீர் ராஜா, இல.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவை கட்சியினருக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர்.

தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

அந்த சுற்றறிக்கையில், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு, தவெக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையை நடத்த கட்சித் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள் என கூறப்பட்டுள்ளது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி?

மேலும், அந்த தீர்மானத்தின் நகலை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து, தவெக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஆட்சியில் பங்கு குறித்து பேசிவரும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், நாங்கள் திமுகவிடம் கமிஷன் கேட்கவில்லை மரியாதையைத்தான் கேட்கிறோம் என்று பேசியுள்ளார்.

தவெக-விற்கு முக்கியத்துவம்?

முதல்வர் ஸ்டாலின் பேச்சைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் நடவடிக்கை, ரகசிய கூட்டம் முதலானவை திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையிலிருந்து தவெக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

அறிக்கைக்காக காத்திருக்கும் ராகுல்

தமிழக, புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அரசியல் களம், காங்கிரசின் செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு பற்றி, எம் வேுணுகோபால் அளிக்கும் அறிக்கையை பொருத்து, ராகுல் காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

சபரீசன் சர்வே, காங்கிரஸ் தனிக் கணக்கெடுப்பு

திமுக சார்பாக சபரீசன் எடுத்த சர்வேயில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் ஆதரவு ஓரளவு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் சார்பில் எடுக்கப்பட்ட சர்வேயில், 70 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in