டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு முறை: 'வீடு தேடி மது விநியோகமா? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு அமல். வயது சரிபார்ப்பு மற்றும் ரசீது வழங்குவது கட்டாயம்.
TASMAC Online Booking System
TASMAC Online Booking Systemgoogle,ai
1 min read

TASMAC Online Booking System: 'Doorstep Liquor Delivery? Minister Vignesh Clarifies!'

மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், வீடுகளுக்கே மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்று பரவி வரும் தகவல்களுக்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கமளித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாக மாற்றங்கள்

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக அமைச்சர் விக்னேஷ், ஆன்லைன் முன்பதிவு மற்றும் டாஸ்மாக் நிர்வாக மாற்றங்கள் குறித்து பல முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

ஆன்லைன் முன்பதிவு முறை

இணையதளத்தில் டாஸ்மாக் மதுபானங்களை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்றும் முன்பதிவு செய்த பிறகு டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று தான் மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வீடு தேடி விநியோகம் இல்லை

வீடுகளுக்கே கொண்டு சென்று மதுபானம் டெலிவரி செய்யப்படும் என்பது முற்றிலும் தவறான செய்தி மற்றும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.

வயது சரிபார்ப்பு

21 வயது நிரம்பாதவர்களுக்கு கண்டிப்பான முறையில் மதுபானம் வழங்கப்பட மாட்டாது. நேரில் கடைக்கு வந்து வாங்கும் போது அவர்களின் வயது உறுதி செய்யப்படும்.

டிஜிட்டல் முறையில் ரசீது

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப, ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதே அதற்கான ரசீது வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடவடிக்கைகளுக்கான காரணங்கள்

மின்சாரக் கட்டணம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், அனைத்து நிறுவனங்களின் மதுபானங்களும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவெக ஆட்சியில் தான் ஊழல் தடுப்பு நடவடிக்கை

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதைத் தடுக்க தவெக ஆட்சியில் தான் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஊழலைக் குறைத்தாலே அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பதால், மது விற்பனையை அதிகப்படுத்தி தான் வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை.

விலை உயர்வு இல்லை

தற்போது மதுபானங்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அமைச்சர் விக்னேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in