Tasmac Shops : சட்டமன்ற தேர்தல் : டாஸ்மாக் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை : தயாரிப்பு, கொண்டு செல்லவும் தடை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒட்டி, டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TASMAC shopes will not operate for 4 days in connection with the Assembly elections
TASMAC shopes will not operate for 4 days in connection with the Assembly electionsgoogle
1 min read

தமிழகத்தில் வாக்குப்பதிவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகும்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 21 to 23 விடுமுறை

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முதல் இரு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

மே 4ம் தேதியும் விடுமுறை

வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்களை மூடவும் உத்தரவு

டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகளிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொண்டு செல்லவும் தடை

இந்த நான்கு நாட்களில் விற்பனை மட்டுமின்றி, மதுபான தயாரிப்பு, மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல் என அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in