TATA JLR Plant: 9,000 கோடியில் டாடா ஆலை : முதல் கார் வெள்ளோட்டம்

ராணிப்பேட்டையில் ரூ.9000 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் கார் ஆலை முலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TATA JLR Plant: 9,000 கோடியில் டாடா  ஆலை : முதல் கார் வெள்ளோட்டம்
1 min read

தமிழகத்தில் தொழில் முதலீடுகள்

TATA Jaguar Land Rover JLR New Manufacturing Plant Ranipet 5000 Employment TATA JLR Plant : Chief Minister M.K. Stalin said Tamil Nadu was proud to witness the expansion of world-class automotive manufacturing தமிழகத்தில் உலகளாவிய மற்றும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் 2030க்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறவேண்டும் என்ற இலக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்

இதற்காக பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய தொழில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

பெண்களுக்கு 41% வேலை

குறிப்பாக, பெண்களுக்கான வேலைவாய்ப்பு பெருமளவில் உருவாக்கப்பட்டதன் காரணமாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண்களில் 41 சதவிகித பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.

டாடா குழுமம்

வாகனங்கள், மின்னணுவியல், எஃகு, தகவல் மோட்டார் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளவில் டாடா டாடா குழுமம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அக்குழுமத்தின் துணை நிறுவனங்களான டிசிஎஸ். டைடன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ், தாஜ் ஹோட்டல்கள் ஆகியவை ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

டாடாவின் மின்வாகன உற்பத்தி ஆலை

அதன் தொடர்ச்சியாக, தற்போது, குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் J.R நிறுவனம் அதிநவீன மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது.

2024ம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பரில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

9,000 கோடியில் டாடா ஆலை

இந்த ஆலையின் முதல் அலகு நிறுவும் பணிகள் 16 மாதங்களில் விரைந்து முடிக்கப்பட்டு, இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது

9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் JLR நிறுவனத்தின் நவீன வாகன உற்பத்தி ஆலையின் முதல் அலகு 900 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

லேண்ட் ரோவர் வாகனங்கள்

உலகப் புகழ் பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆலையின் முதலாவது வாகனம் இன்று வெளியிடப்பட்டது. உற்பத்தியை ஆலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பணிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொருசு வாகனத்தை இயக்கியதுடன் கொடியசைத்தும் தொடங்கி வைத்தார்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in