”லைட் ஹவுஸ் to அடையாறு உயர்மட்ட பாலம்” : போக்குவரத்தை நெரிசலை குறைக்க நடவடிக்கை : திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்...!

கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
tender invited for preparation of a report on a project to construct  elevated road from Lighthouse to  Adyar
tender invited for preparation of a report on a project to construct elevated road from Lighthouse to Adyar source:thamizhalai,ai generated
1 min read

நெரிசல் மிக்க சாலை

சென்னையில் மிக நெரிசல் மிக்க சாலைகளில் ஒன்றாக, கலங்கரை விளக்கம் முதல் திரு.வி.க. பாலம் வரையிலான சாலை திகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மெட்ரோ பணிகள் நடப்பது, முதல்வர் விஜய், தலைமைச் செயலக ஊழியர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

சாந்தோம் பகுதியில் அதிக அளவில் பள்ளிக் கூடங்கள் இருப்பதால், காலை மற்றும் மாலை வேளைகளில், வாகனங்கள் ஊர்ந்து தான் செல்ல வேண்டி இருக்கும்.

உயர்மட்ட சாலை

போக்குவரத்தை நெரிசலை குறைக்கும் வகையில், கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க. பாலம் வரை 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது.

திட்ட அறிக்கை - டெண்டர் கோரிக்கை

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க நெடுஞ்சாலைத்துறையின் சென்னை நகர சாலைகள் கோட்டம் டெண்டர் கோரியுள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ.38 லட்சத்து 10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் அவகாசம்

டெண்டர் பணியை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முன்வைப்புத் தொகையாக ரூ.29,500 செலுத்த வேண்டும். டெண்டர் கட்டணம் இல்லை. தகுதியான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலுக்கு விடிவு கிடைக்கும்

இந்த புதிய உயர்மட்ட சாலை அமைந்தால், மெரினா கடற்கரை சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிபார்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

திட்ட வரைவு அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு, அந்தப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் மேம்பாலம் அமைக்கும் இடத்திற்கான வழித்தடம் அல்லது தற்போதைய வழித்தடத்தில் மாற்று வழித்தடத்தை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

உயர்மட்டச் சாலைக்கான இணைப்பு மற்றும் அணுகுச்சாலைகளை வடிவமைக்க வேண்டும்.

மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறுக்குக் கால்வாய் மற்றும் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

போக்குவரத்து இயக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் வடிவமைப்புகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சர்வீஸ் ரோடு எனச் சொல்லப்படுகிற சேவைச் சாலைகளைத் தேவையான இடங்களில் வடிவமைக்க வேண்டும்.

அங்கிருந்து தேவைப்பட்டால் போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகளைத் திட்டமிட வேண்டும்.

உயர்மட்ட சாலைதான் சிறந்தது

இந்த உயர்மட்டச் சாலையின் நோக்கம், சாந்தோம் முதல் அடையாறு வரை நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், உயர்மட்டச் சாலை சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in