

மாநகராட்சி டெண்டர் முறைகேடு
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக், அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டை முன்வைத்தது,
முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கு ஆதாரங்களுடன் புகாரையும் அளித்தது.
தவெக அரசு நடவடிக்கை
இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் உயரதிகாரிகள் மூலம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
விரிவான விசாரணைக்கு உத்தரவு
விரிவான விசாரணை நடத்த நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவ்விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த அனைத்து நபர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காத்திருப்போர் பட்டியலில் ஆணையர்
இதனிடையே, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த எஸ். பாலசந்தர், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையராக உள்ள ஆர். சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
செயற்பொறியாளர் சஸ்பெண்ட்
செயல்முறை குறைபாடுகளுக்காக தாம்பரம் மாநகராட்சியின் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அறப்போர் இயக்கம் புகார் விவரம்
அறப்போர் இயக்கம் அளித்த புகாரில், “தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்துக்குட்பட்ட பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பகுதியில் ரூபாய் 27.30 லட்சம் மதிப்பில் அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது.
டெண்டருக்கு முன்பே பணிகள் நிறைவு?
ஒப்பந்தப்புள்ளி ஆகஸ்ட் 24ஆம் தேதி திறக்கப்பட இருந்தது.ஆனால், ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாகவே ஜூலை 29ஆம் தேதியே பணி முடிக்கப்பட்டு திறப்பு விழாவும் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியது.
டெண்டருக்கு முன்பே சிலை திறப்பு
இதேபோல், சிட்லபாக்கம் ரவுண்டானா பகுதியில் ரூபாய் 18.60 லட்சம் மதிப்பில் தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிடப்பட்டு..
இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆகஸ்ட் 24ஆம் தேதி திறக்கப்பட இருந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதியே சிலை திறக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய தளத்தில் அப்டேட் இல்லை
இந்த பணிகளுக்கான நிதி ஏலங்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய நிலையில் மாநகராட்சியின் இணையதளத்தில் அவை தொடர்ந்து ‘திறக்கப்பட வேண்டியது’ என்ற நிலையிலேயே இருப்பதாகவும், ஆனால் பணிகள் முடிக்கப்பட்டு இந்த இரண்டு திறப்பு விழாக்களையும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் நேரடியாக சென்று திறந்து வைத்திருப்பதாகவும் அறப்போர் இயக்கம் தெரிவித்தது.
மேலும், தாம்பரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளின் இறுதி நிலை ஒப்பந்தம் வழங்கப்பட்ட விவரம் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்” என்ற கோரிக்கையும் எழுந்து இருக்கு.
======================