”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” : விசிக தலைவர் திருமா எதிர்ப்பு : மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்த்கக்து
'Thai Maman' thaanga mothiram thittam  VCK leader Thiruma opposes it and urges reconsideration.
'Thai Maman' thaanga mothiram thittam VCK leader Thiruma opposes it and urges reconsideration. google
2 min read

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்

தவெக அரசு ஆட்சி அமைத்தால் புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமன் தங்க மோதிர திட்டமானது அறிமுகம் செய்யபடும் என்று தெரிவித்திருந்தார் , இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பெரும்பான்மையை பெற்று தவெக ஆட்சி அமைத்தது , இந்த நிலையில் , தற்போது இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது

செப் 15 ல் தொடக்கம் , ₹755.83 கோடி

அறிஞர் அண்ணாவில் பிறந்தநாளான்று தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கிவைப்பார் என்று தமிழக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் , பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையாக அற்வித்திருந்தது ,

இந்த நிலையில் இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ₹755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தங்க மோதிர திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் , திருமா வலியுறுத்தல்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் , விசிக தலைவர் திருமா எதிர்ப்பு , திட்டத்திஅ மறுபரிசீலனை

முதல்வர் விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 755 கோடி செலவிடப்படும் நிலையில், அதனை தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளின் பிரசவ அறைகளை மேம்படுத்தாலம்

பிறந்த குழந்தைகளுக்கு அண்விக்கப்படும் மோதிரம், சில மாதங்களிலேயே அக்குழந்தைகளுக்கு பொருந்தாமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன.

தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

தரமான பிரசவ வார்டுகளை உருவாக்குவதே மக்களுக்கு பயனாக அமையும்

இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று தாய்மாமம் தங்க மோதிர திட்டத்தை மறுபரிசீலனி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in