

பொங்கல் திருநாள் கொண்டாட்டம்
Pongal Festival 2026 Celebration Auspicious Time in Tamil : இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் திருநாளாக பொங்கல் திகழ்கிறது.
தமிழரின் பாரம்பரிய பண்டிகை
தமிழர்களின் பாரம்பரியமான முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, தைத்திருநாள், தைப்பொங்கல், பெரும் பொங்கல் என பல பெயர்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நான்கு நாட்கள் பொங்கல் விழா
இதற்கு முக்கிய காரணம், பொங்கல் பண்டிகை சங்க காலத்தில் இருந்தே கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தமிழகத்தில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது(How many days Pongal is Celebrated in Tamil Nadu). அதன்படி, ஜனவரி 14 முதல் நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
2ம் நாளான நாளை தைப்பொங்கல்(Thai Pongal 2026) அல்லது பெரும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் மாட்டுப் பொங்கல், கணுப்பொங்கல். நான்காம் நாள்: காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தை திங்கள் முதல்நாள் ‘பொங்கல்’
தை மாதம் பிறக்கும் நாளே தைப்பொங்கல் அன்று மக்கள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து, புதிதாக வாங்கிய அரிசி மற்றும் வெல்லம், உணவுப் பண்டங்கள் பயன்படுத்தி பொங்கல் தயாரிப்பார்கள்.
புதிதாக வாங்கிய மண்பானை அல்லது வெண்கல பானையில் மஞ்சள் கொத்து கட்டி, கரும்பு வைத்து பொங்கல் பொங்குவார்கள். இவ்வாறு பொங்கிய பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு மரபாகும்.
சங்க இலக்கியங்களில் பொங்கல்
சங்க இலக்கியங்களில், பொங்கல் மற்றும் தை நீராடல் குறித்த குறிப்புகள், பாடல்கள் உள்ளன. தை மாதம் தொடங்கும் போது, அதிகாலை நேரத்தில் குளம் மற்றும் ஆற்றில் குளிப்பதை ‘தை நீராடல்’ என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஆண்டாள் அருளிய திருப்பாவையிலும், மாணிக்கவாசகர் இயற்றிய திருவம்பாவையிலும் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பொங்கல் பண்டிகை என்பது நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவிய அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகும்.
விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியன், மழைக்கு அதிபதியான இந்திரன், விவசாயத்திற்கு துணை நிற்கும் கால்நடைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் நன்றி கூறி வழிபடுவது பொங்கல் கொண்டாட்டத்தின் அடிப்படை நோக்கம்.
இயற்கை தெய்வமாக வழிபடும் தமிழர்கள்
இயற்கையை தெய்வமாக வழிபட்டு வந்த முன்னோர்களின் பாரம்பரியம், இன்றும் பொங்கல் பண்டிகை வழியாக உயிர்ப்புடன் தொடர்கிறது.
தை மாதம் ஒன்றாம் தேதி, சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நாளே தை 1 அல்லது பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
மகர ராசியில் பயணிக்கும் சூரியன்
வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றும், தென் மாநிலங்களில் சங்கராந்தி என்றும் அழைக்கின்றனர். இது தேவர்களின் பகல் காலமான உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.
பொங்கல் வைக்க உகந்த நேரம்
நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை. அதேபோன்று, காலை 10.35 மணி முதல் பகல் 1 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்(Pongal Celebration 2026 Auspicious Time in Tamil). இந்த நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவனின் வழிபட்டு அவரது அருளை பெறுவோம்.
சிறப்புகள் நிறைந்த பொங்கல் திருநாளை பாரம்பரிய முறையில் கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.
=====