‘வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!’ : ”வாணவேடிக்கை வாக்குறுதிகள்”, தவிக்கும் தவெக அரசு : திமுக கடும் விமர்சனம்...!

தமிழக அரசு தாக்கல் செய்து இருப்பது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என்று, திமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.
Thangam Thennarasu criticized the document presented by the Tamil Nadu government, calling it an "empty report"
Thangam Thennarasu criticized the document presented by the Tamil Nadu government, calling it an "empty report" google
1 min read

தமிழக அரசின் வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் மாநிலத்தின் கடன் சுமை 13 லட்சம் கோடியாக இருப்பதாகவும், ஒவ்வொரு தனி நபர் மீதும் 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கடனாக சுமத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

வெள்ளை அறிக்கை - திமுக பதிலடி

இதற்கு திமுக பதிலடி கொடுத்து இருக்கிறது. அப்போது நிதி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வெளியிட்டு இருக்கும் பதிவில், “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது.

“வாணவேடிக்கை வாக்குறுதிகள்”

ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.

பொதுமக்களை பார்த்து அச்சம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக...

வெள்ளை அறிக்கை நாடகம்

தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றதே தவிர, வேறு எதற்குமல்ல. எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்” என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் முக்கிய அம்சங்கள் :

!. திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக அதிகரிப்பு

2. 2021 முதல் 2026 வரை வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு

3. சொந்த வரி வருவாய் வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது

4. மூலதன செலவு குறைந்துள்ளது, கட்டாய செலவு உயர்ந்துள்ளது.

5 தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கோவிட் தொற்று ஆண்டைவிட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்துள்ளது.

6. ரூ.10 லட்சம் கோடி மாநிலத்துக்கு நேரடி கடன் உள்ளது.

7. மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாய்.

8. மாநிலத்தின் மொத்த செலவுகளில் 22.8% வட்டிக்கு செல்கிறது.

9. தமிழகத்தில் மொத்த செலவில் 64.4% கட்டாய செலவுக்கு செல்கிறது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in