

The 'CM Vijay' Style in Tamil Nadu Politics: The Black Coat-Suit That's Trending—Do You Know Its Price?
தமிழகத்தின் 9-வது முதல்வராக விஜய்
தமிழகத்தின் 9- வது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் முடிவுகளைப் போலவே ஆடைத் தேர்விலும் புதிய மாற்றத்தைப் புகுத்தி இளைஞர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
அடையாளமாக மாறிய கருப்பு கோட்-சூட்
தேர்தல் பிரச்சார காலங்களில் 'சந்தன நிற பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை' அணிந்து வந்த விஜய், பதவியேற்பு விழாவின் போது அனைவரும் எதிர்பார்த்த வேட்டி-சட்டைக்கு மாற்றாக, கருப்பு நிற கோட்-சூட் மற்றும் நெற்றியில் கருப்புப் பொட்டுடன் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
சி.எம்.கோட் சூட்
தற்போது சட்டமன்றக் கூட்டத்தொடர்களிலும் அவர் அதே பாணியைத் தொடர்ந்து வருவதால், "தமிழக முதல்வர் விஜய் என்றால் கோட்-சூட்" என்ற புதிய பிம்பம் உருவாகியுள்ளது.
பிசினஸ் வாய்ப்பாக மாறிய 'சிஎம் லுக்'
விஜய்யின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஜவுளி நிறுவனங்கள் இதனை ஒரு பெரிய வணிக வாய்ப்பாக மாற்றியுள்ளன.
முதல்வர் விஜய் அணிவதைப் போன்றே கருப்பு நிற பேண்ட், வெள்ளை சட்டை, கோட் மற்றும் பெல்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான 'காம்போ பேக்' சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விலை சுமார் ரூ. 4,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே இதற்குப் பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது.
த்ரிஷா புடவைக்கும் வரவேற்பு
முதல்வரின் ஆடை மட்டுமல்லாது, பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா அணிந்து வந்த புடவையும் தற்போது பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தையில் இந்த வகை புடவைகளின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அரசியல் ரீதியாகத் தனது தனித்துவத்தைக் காட்டும் விஜய், ஆடை அலங்காரத்தின் மூலமாகவும் தமிழக இளைஞர்களிடையே ஒரு புதிய ஃபேஷன் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====