சிக்கனம் எனும் தாரக மந்திரம் : ஆடம்பரத்தைத் தவிர்த்த தவெக அமைச்சர்கள் : தமிழக அரசியலில் புதிய முன்னுதாரணம்!

முன்னாள் அமைச்சர்களின் அறைகளை எவ்வித மாற்றமுமின்றி தவெக அமைச்சர்கள் அப்படியே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
The Guiding Mantra of Frugality: TVK Ministers Shun Luxury—A New Precedent in Tamil Nadu Politics!
The Guiding Mantra of Frugality: TVK Ministers Shun Luxury—A New Precedent in Tamil Nadu Politics!source:google
1 min read

The Guiding Mantra of Frugality: TVK Ministers Shun Luxury—A New Precedent in Tamil Nadu Politics!

தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை விதைக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் தங்களது நிர்வாகப் பணிகளை தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ளனர்.

சிக்கனம் எனும் தாரக மந்திரம்

பொதுவாக ஒரு புதிய அரசு பொறுப்பேற்கும்போது, அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் அறைகளை இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் புதுப்பிப்பது ஒரு எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது.

ஆனால், தவெக அமைச்சர்கள் இந்தப் போக்கை முற்றிலுமாக மாற்றி, 'சிக்கனம்' என்ற புதிய தாரக மந்திரத்துடன் களம் இறங்கியுள்ளனர்.

மாற்றமில்லாத அலுவலகங்கள்

பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களின் அறைகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

தேவையற்ற கூடுதல் செலவுகள் தவிர்ப்பு

தரைவிரிப்புகள், நாற்காலிகள், மேசைகள் அல்லது திரைச்சீலைகள் என எதையும் புதிதாக மாற்ற அவர்கள் விரும்பவில்லை. இது அரசு கஜானாவிற்கு ஏற்படவிருந்த தேவையற்ற கூடுதல் செலவுகளைத் தவிர்த்துள்ளது.

அமைச்சர்களின் நிலைப்பாடு

இது தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், "ஏற்கனவே உள்ள வசதிகள் சிறப்பாக இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தைப் புதிய ஆடம்பரங்களுக்காக வீணடிக்க வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இக்கருத்து அரசியல் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

தற்காலிகப் பணிகள் மற்றும் தங்குமிடம்

புதிய மைச்சர்களுக்கான துறைகள் இன்னும் முழுமையாக ஒதுக்கப்படாத நிலையிலும், தவெக அமைச்சர்கள் தற்காலிக அறைகளில் அமர்ந்து தங்களது உதவியாளர்களுடன் இணைந்து முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களுக்கு கால அவகாசம்

முன்னாள் அமைச்சர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லங்களைக் காலி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், புதிய அமைச்சர்கள் தற்காலிகமாகத் தனியார் விடுதிகள் அல்லது தங்களது சொந்த இல்லங்களில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in