”வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே சேர்ப்பு” : தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.77 கோடி : டிச.11 வரை விண்ணப்பிக்க அவகாசம்!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதன்படி, 5.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
 the release of the draft electoral roll in Tamil Nadu, there are 5.77 crore voters.
the release of the draft electoral roll in Tamil Nadu, there are 5.77 crore voterssource:thamizhalai,ai generated
2 min read

வரைவு வாக்காளர் பட்டியல்

தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

வாக்காளர் எண்ணிக்கை 5.77 கோடி

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 77 லட்சத்து 46,618 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 82 லட்சத்து 3,992 பேர், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 95 லட்சத்து 34,734 பேர். 3-ம் பாலினத்தவர்கள் 7,892 பேர்

சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு 4 லட்சத்து 3,327 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 77 லட்சத்து 46,618 வாக்காளர்கள் இடம்பெற்றனர்.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 32 லட்சத்து 39,301 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் 29 லட்சத்து 14,908 வாக்காளர்கள், சேலம் மாவட்டத்தில் 27 லட்சத்து 95,315 வாக்காளர்கள், கோவை மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்து 68,820 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைவான வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் (5,29,528) உள்ளது தொகுதிகள் அடிப்படையில் சோழிங்கநல்லூர் (5,58,729), ஆவடி (4,39,953), மாதவரம் (4,37,465) ஆகியவை அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதிகளாகவும், துறைமுகம் (1,20,852), எழும்பூர் (1,39,732), வில்லிவாக்கம் (1,64,527) ஆகியவை குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளாகவும் உள்ளன.

ஆணைய இணைய தளத்தில் பார்க்கலாம்

அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்பட்ட வாக்காளர்கள் பட்டியல்களை https://elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள்

வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 21, 22, 29 ஆகிய விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றுக்கான படிவங்கள் அங்கேயே கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

பெயர்சேர்த்தலுக்கான படிவத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகளின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். முகவரிக்கான சான்றாக நீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு ரசீது, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்கலாம்.

தமிழகத்தில் 74 லட்சம் பேர் நீக்கம்

எஸ்ஐஆர் பணிகளின் போது இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டைப் பதிவுகள் காரணமாக மொத்தம் 74 லட்சத்து, 7 ஆயிரத்து 207 பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தன. இன்றுவரை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது தங்களுடைய சந்தேகத்தை முன்வைத்து வருகின்றன.

வெறும் 4 லட்சம் பேர் மட்டும் சேர்ந்தனர்

இந்தநிலையில் தான் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலானது வெளியிடப்பட்டு இருக்கு. இரண்டு மாதங்களாக நடைபெற்ற தொடர் திருத்தப் பணிகளின் முடிவில், வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 4 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே புதிதா சேர்ந்து இருக்காங்க.

தங்களோட பெயர்கள் விடுபட்டதா சொல்றவங்க முறையான ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம் அப்படின்னு தேர்தல் ஆணையம் தெரிவிச்சு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் வெறும் 4 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இணைஞ்சி இருக்காங்க.

அப்படின்னா 70 லட்சம் பேர் ஏன் வரலை. அவங்கள நீக்கியதற்காக தேர்தல் ஆணையம் தெரிவிச்ச காரணங்கள் சரியானது தான் என்று நினைக்க தோணுது.

வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும் பிழையின்றியும் பராமரிக்கவே இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்து இருந்துச்சு.

74 லட்சம் பேர் நீக்கம் ஜனநாயகத்துக்கு எதிரானது அப்படினு போராடி வர்ற எதிர்க்கட்சிகள் இதுக்கு என்ன பதில் சொல்லப் போறாங்க. நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க்கணும்ன்னு, வரும் 26ம் தேதி சென்னையில நடத்த இருக்கிற பேரணி எந்த பயனை கொடுக்க போகுதுன்னு தெரியல.

உண்மையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தா, அவங்கள மீண்டும் பட்டியலில் சேர்க்க பொறுப்பு, கடமை அனைத்து கட்சிகளுக்கும் இருக்கு. ஆனா, 2 மாதங்களா என்ன செஞ்சாங்க அப்படின்னே தெரியலை.

=====