“ரூ.700 கோடி மதிப்புள்ள ஹெராயின்” : சென்னையில் பறிமுதல், 2 பேர் கைது : அதிர வைக்கும் தகவல்கள்..!

சென்னையில்.700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
The seizure of heroin worth 700 crore rupees in Chennai has caused quite a stir.
The seizure of heroin worth 700 crore rupees in Chennai has caused quite a stir.source:thamizhalai,ai generated
1 min read

போதைப்பொருள் கடத்தல் தீவிர சோதனை

சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஐஸ்கிரீம் வாகனத்தில் சோதனை

மாதவரத்தில் உள்ள ஒரு ஐஸ் தொழிற்சாலை அருகே ஐஸ் கட்டிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடமாடும் ஐஸ்கிரீம் வாகனத்தை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டனர்.

70 கிலோ ஹெராயின் பறிமுதல்

அந்த வாகனத்தின் குளிர்பதனப் பெட்டிக்குள் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்

மதிப்பு ரூ.700 கோடி

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதகா தெரிகிறது.

இரண்டு பேர் கைது

இந்தக் கடத்தல் தொடர்பாக வாகனத்தில் இருந்த அப்துல் ஷுக்கூர் மற்றும் ஷபிக் அகமது ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தென் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

பிடிபட்டவர்களிடம் விசாரணை

மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் இந்தப் போதைப்பொருளைத் தங்களிடம் கொடுத்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லச் சொன்னதாகப் பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையை முடுக்கி விட்ட அதிகாரிகள்

இந்த ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது மற்றும் இதன் பின்னணியில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளது, முக்கியக் குற்றவாளிகள் யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

================