

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
\சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்ட அவர், நவம்பர் 9ம் தேதிவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கே.என்.நேரு - முன்னாள் அமைச்சர்
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் அரசு டெண்டர்களில் முறைகேடு செய்து, "கட்சி நிதி" என்ற பெயரில் 7.5% முதல் 10% வரை சட்டவிரோதமான முறையில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு.
இவற்றில் மொத்தமாக ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எஃப்.ஐ.ஆர் பதிவு.
364 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.
வி. செந்தில் பாலாஜி - முன்னாள் அமைச்சர்
திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டரில் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ (CBI) விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக ஆட்சியின் போது, 2011-2015 ஆண்டு காலங்களில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற 'வேலை வாங்கித் தரும் மோசடி' (Cash-for-jobs scam) மற்றும் பணமோசடி வழக்குகளை அமலாக்கத்துறை (ED) விசாரித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, ஆளும் தரப்பு ( தவெக ) எம்.எல்.ஏவை விலைக்கு வாங்க முயன்றதாக ரூ.35 கோடி லஞ்சப் புகாரிலும் இவரது பெயர் அடிபடுகிறது.
துரைமுருகன் - முன்னாள் அமைச்சர்
1996 முதல் 2001 வரை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
2007ல் அவரது குடும்பத்தினரையும் விடுவித்து வழங்கப்பட்ட தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உத்தரவு.
எ.வ. வேலு - முன்னாள் அமைச்சர்
திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் ஈ.வி.குமரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கன.
நெடுஞ்சாலைத் துறையில் நடைபெறாத சாலைப் பணிகளுக்கு முன்கூட்டியே கோடிக்கணக்கில் தொகையை விடுவித்து முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 11 பேர் மீது வழக்குப்பதிவு
எ.வ. வேலு மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை, உச்சநீதிமன்றம் ஹைகோர்ட் உத்தரவில் தலையிட மறுப்பு
மழவண்ணாம்பாடி ஏரியில் இருந்து அனுமதியின்றி 45 லட்சத்துக்கும் அதிகமான கன அடி மணல் அள்ளியதாக எ.வ.வேலு மற்றும் அவரது மகன் ஈ.வி.குமரன் மீது வழக்கு
கீதா ஜீவன் - முன்னாள் அமைச்சர்
1996 முதல் 2001 வரையிலான ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.31 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு.
கீதா ஜீவன் தந்தையும் முன்னாள் அமைச்சருமான என். பெரியசாமி மீதும் வழக்குப்பதிவு. தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறி விட்டதாக கூறி, 2022ம் ஆண்டு கீதா ஜீவன் உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை
பொன்முடி - திமுக முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி உட்பட 7 பேரையும் 2026ல் விடுதலை செய்தது.
அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கையும் ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
முன்னதாக, பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் - முன்னாள் அமைச்சர்
2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.7 கோடி சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் ஒழிப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்திலிருந்து மதுரைக்கு மாற்றி, பணமோசடி வழக்காக விசாரிக்கக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 4, 2026 அன்று தள்ளுபடி செய்தது.
ஜூன் 20, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், தமிழ்நாடு முதலமைச்சர்ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனுக்கு,
திருச்செந்தூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
ஐ. பெரியசாமி - முன்னாள் அமைச்சர்
2006 முதல் 2010 வரை வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.1 கோடி அளவில் சொத்து சேர்த்ததாக ஐ. பெரியசாமி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு
திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றம் இவர்களை விடுவித்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டு மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கில், திண்டுக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணக்கு உச்சநீதிமன்றம் தடை
லஞ்ச ஒழிப்புத் துறையின் சொத்துக்குவிப்பு மற்றும் வீட்டுவசதி வாரிய வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு. ஆனால், இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.
தங்கம் தென்னரசு - முன்னாள் அமைச்சர்
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சரா இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சுமார் 76 லட்சம் மதிப்புள்ள சொத்து சேர்த்ததாக இவர் மீதும் இவரது மனைவி மணிமேகலை மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு
விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்து தங்கம் தென்னரசை விடுவித்து 2022ல் உத்தரவு
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்கை மறுபரிசீலனை செய்தார். தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த உத்தர விட்டார்.
இதை எதிர்த்து, தங்கம் தென்னரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு.
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - முன்னாள் அமைச்சர்
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.44.56 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆர். ஆதிலட்சுமி மற்றும் நண்பர் கே.எஸ்.பி. சண்முகமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு
போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் 2023ல் விடுதலை செய்தது.
விடுவிப்பு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் தாமாக முன்வந்து மறுஆய்வு வழக்கை விசாரித்து, சொத்துக்குவிப்பு வழக்கு தினசரி விசாரித்த முடிக்க உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
====================================