சிறப்பு தரிசன டிக்கெட் முறைக்கேடு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக்கவசம் அணிந்து பக்தரைப் போன்று சென்ற அமைச்சரிடம், விரைவான தரிசனத்துக்கு ரூ. 4,000 லஞ்சமாக பெற்ற அர்ச்சகர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர்.
கோயிலை ஆய்வு செய்து , அது குறித்து பேசிய அமைச்சர்
திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் புகார்கள் எழுப்பி வந்தனர். இதன்காரணமாக இன்று காலை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல் ஆய்வுக்கு வருகை தந்தேன்.கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முறைக்கேட்டில் ஈடுப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
அர்ச்சகர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்புக் கடிதம் பெறவில்லை. விளக்கக் கடிதம்தான் பெற்றுள்ளேன்.
கோயில் சொத்துகள், வருமானம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன். அவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
கோயில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
மேலும், அன்னதானக் கூடம், அடிப்படை வசதிகள், விரிவான தரிசனம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இன்று முழுவதும் கோயிலில் ஆய்வு செய்யவுள்ளேன் என்றும்
முறைக்கேடு : பாரப்பட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்
முறைக்கேட்டை விசாரித்து ஆய்வின் முடிவில் முழு அறிக்கை வழங்குவேன். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி, தயக்கமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
===========================