Vaiko vs Thiruma : ”கூட்டணிக்கு நிலைப்பாடு, நோபல் பரிசு “ : கிண்டலடித்த வைகோ, பதிலடி கொடுத்த திருமா...!

கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக, நோபல் பரிசு கொடுக்கலாம் எனக் கிண்டலடித்த வைகோவிற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
Thirumavalavan hit back Vaiko, who  mockingly suggested Nobel Prize should be awarded regarding the stance on alliance
Thirumavalavan hit back Vaiko, who mockingly suggested Nobel Prize should be awarded regarding the stance on allianceAI generated
1 min read

விடுதலை சிறுத்தைகள், மதிமுக

திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தவெக அரசுக்கு ஆதரவு அளித்து, கூட்டணி அரசிலும் இடம்பெற்று இருக்கிறது.

இருந்தாலும்,திமுகவுடன் நட்புடன் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்தத சர்ச்சையானது. அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

அதேபோன்று, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுகவும், தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு தவெகவை அரசுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இருப்பினும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்யாதது, வைகோவிற்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆட்சிக்கு திமுக முயற்சி

இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு, ஆளுநர் ஆட்சி மூலம் பாஜக ஆட்சியை கொண்டு வர திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

180 இடங்களில் தவெக வெற்றி

முதல்​வர் விஜய் கரூருக்கு செல்​லக் கூடாது என்று சென்றவர்களுக்கு உச்ச நீதி​மன்​றம் சாட்​டையடி அடித்​துள்​ளது. இன்​னொரு முறை தேர்​தல் வந்​தால் 180 இடங்​களில் விஜய் வெற்றி பெறுவார்.

திருமாவுக்கு நோபல் பரிசு தரலாம்

தவெக ஆட்​சி​யில் இடம் பெற்​றிருந்​தாலும், திமுக தலை​வர் ஸ்டா​லினுடனான கருத்து பரிமாற்​றம் தொடர்வதாக, திருமாவளவன் கூறியதற்​கு, நோபல் பரிசே கொடுக்​கலாம்” என்று வைகோ கிண்டலாக கூறினார்.

நோபல் பரிசு பரிந்துரை - வைகோவுக்கு நன்றி

இதற்கு எதிர்வினை ஆற்றி இருக்கும் திருமாவளவன், “ தனக்கு நோபல் பரிசு கிடைக்க பரிந்துரை செய்ததற்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பதாக பதிலடி கொடுத்தார்.

யாரையும் எதிரியாக பார்க்க கூடாது

ஒரு கூட்​ட​ணியி​லிருந்து ஒரு கட்சி வெளி​யேறி​விட்​டால் அந்​தக் கட்​சியை எதிரிக்​கட்​சி​யாக பார்க்​கக்​கூடிய, தவறான அரசி​யல் கண்​ணோட்​டம் தமிழக அரசி​யலில் உள்​ளது.

திமுக - தவெக இணைந்து செயல்பட வேண்டும்

வில​கிய பின்​னரும் நட்​புறவு கூடா​தா, பாஜகவை வீழ்த்த இண்டியா கூட்​ட​ணி​யில் தவெக​வும், திமுக​வும் இணைந்து செயல்பட வேண்​டும்.

தவெக அமைச்​சர​வை​யில் நாங்​கள் சேர்ந்​தா​லும், திமுக​வுட​னான உறவு முடியவில்​லை, நட்பு தொடர்​கிறது என்​றேன்.அதே​போல, விருது வழங்​கும் விழா​வில் நாங்​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அந்​தக் கூட்​ட​ணியை முறித்​துக் கொண்​ட​தாக​வும் சொல்​ல​வில்​லை.

இப்​படி ஒரு நிலை​யில், எங்​கள் கட்சி முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் திமுக​வில் சேர்ந்​துள்​ளார். இதன்​மூலம் திமுக கூட்​ட​ணி​யில் விசிக இல்லை என உணர்த்​தி​ விட்​டார்​கள். இந்த நிகழ்வை மனதில் வைத்​துக் கொண்டு நாங்​கள் ஒன்​றும் திமுக​வுடன் சண்டை போட​வில்​லை” என்று திருமாவளவன் பதிலளித்தார்.

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in