"ஜோசப் விஜய் எனும் நான்”, VCK கையில்! : விசில் ஊதுவாரா திருமா? : மாலை 4 மணிக்கு அறிவிப்பு, திக் திக் நிமிடங்கள்...

தவெகவிற்கு விசிக ஆதரவளித்து, ஆட்சி அமைக்க உதவுமா என்ற கேள்விக்கு மாலை 4 மணிக்கு பதிலளிக்கிறார் திருமாவளவன்.
Thirumavalavan will answer the question at 4 pm whether VCK support TVK, to form government
Thirumavalavan will answer the question at 4 pm whether VCK support TVK, to form governmentgoogle
1 min read

தவிக்கும் தவெக

சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் தவிக்கிறது. முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் ஆன போதும், ஒரு முடிவுக்கு வர முடியாமல் முட்டுக்கட்டை நீடிக்கிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதரவு

ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெகவிற்கு காங்கிரஸ் கை கொடுக்க 5 இடங்கள் கிடைத்தது. இரண்டு கம்யூனிஸ்டுகளும் தலா 2 சீட்களுடன் தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தந்து இருக்கிறார்கள்.

கைவிரித்த ஐயூஎம்எல்

116 இடங்கள் கிடைத்து விட்ட நிலையில், இன்னும் இரண்டே இடங்கள் தான் தேவை. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்க முடியாது என்று கூறி விட்டது.

விசிக ஆதரவு அவசியம்

அப்படி என்றால், இப்போது கைவசம் 2 உறுப்பினர்களை வைத்திருக்கும் விசிகவின் திருமாவளவன் ஆதரவு அளித்தால் மட்டுமே விஜய்யால் ஆட்சி அமைக்க முடியும்.

மாலை 4 மணிக்கு முடிவு

காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய திருமாவளவன் இன்று காலை தனது முடிவை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால், அது மாலை 4 மணிக்கு தள்ளிப்போய் இருக்கிறது.

உற்று நோக்கப்படும் திருமா

திருமா ஆதரித்து விட்டால், விஜய் ஆட்சிக் கட்டிலில் ஏறுவது உறுதியாகி விடும். எனவே தான், திருமாவளவனின் அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

திருமாவளவன் ஆதரவு அளிக்க மறுத்து விட்டால், தமிழகம் ஜனாதிபதி ஆட்சியை நோக்கி நகரும். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி?

அதற்குள் கூட்டணி கணக்களும் மாறும். எதிர்பார்க்கும் முடிவு கிடைக்காமல் போகும். எப்போது தெளிவான முடிவை எடுக்கும் தமிழக மக்களின் கோபம் யாரை ஏற்றும், யாரை வீழ்த்தும் என்று கணிக்கவே முடியாது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in