

தமிழக அரசியலில் தினமும் திருப்பம்
தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திருப்பங்களுக்கு பஞ்சம் என்பதே இல்லை. தினம்தினம் புதுக் கதைதான். தவெகவிற்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், திடீரென திமுக கூட்டணியை விட்டு விலகிய காங்கிரஸ், விஜய்க்கு ஆதரவு கொடுத்தது.
முதலில் காங்கிரஸ்....
திமுக கூட்டணியை விட்டு எப்போதும் வர மாட்டாங்க சொல்லப்பட்ட விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தர விஜய் முதல்வரானார்.
தவெகவிற்கு ஆதரவுக்கரம்
இதுக்கு மேலே ஒருபடி போய், விசிகவும், ஐயுஎம்எல் கட்சியும் தவெக அமைச்சரவையில் இணைந்து விட்டார்கள். இதற்கு இடையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் விஜய் அரசை ஆதரித்து வாக்களித்தார்கள்.
இந்த அணிக்கு, அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், 35 பேரோடு அமைச்சரவை விரிவாக்கத்தை முடித்தார் முதல்வர் விஜய்.
அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், வேலுமணி தரப்பை சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர், எடப்பாடி தரப்பிற்கு மீண்டும் ஆதரவு தர முன் வந்தார்கள்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
இந்தநிலையில், இரண்டு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் இன்று நடந்தது. வேலுமணி தரப்பை சேர்ந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் சபாநாயராகரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்கள்.
மூன்றாக உடைந்த அதிமுக
இதன் காரணமாக அதிமுக மூன்றாக உடைந்து இருக்கிறது. எடப்பாடி தரப்பிற்கு 22 பேர், வேலுமணி தரப்பிற்கு 22 பேர், ராஜினாமா எம்எல்ஏக்கள் 3 பேர் என அதிமுக நிலை உள்ளது.
தவெகவிற்கு தாவினர்
ராஜினாமா கடிதம் அளித்த கையோடு, மூன்று பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்கள். அப்போது தங்களை தவெகவில் இணைத்து கொள்வதாக, அவர்கள் கூறினர். அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படுவோம் என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
இதனிடையே, எடப்பாடி தரப்பு நிர்வாகிகள் சபாநாயகரை சந்தித்து, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
====