மகளிர் உரிமைத்தொகை திட்ட மறுசீரமைப்புக்கு அவகாசம் தேவை : விரைவில் ரூ.1,000 வரவு, முதல்வர் விஜய் வாக்குறுதி...

மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் நாளை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்து இருக்கிறார்.
Time is needed to revamp the Women's Rights Payment Scheme: Chief Minister Vijay
Time is needed to revamp the Women's Rights Payment Scheme: Chief Minister Vijay google
1 min read

முதல்வர் விஜ்யின் அறிவிப்பு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்

2500 : விரைவில் அறிவிக்கப்படும்

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டு அறிக்கை

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, முன்னர் செயல்படுத்தி வந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான 1000 ,பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்” .

திமுகாவின் தேர்தல் அறிக்கை

முன்னதாக கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்தது அரசானை அறிவித்திருந்தது அப்போதைய திமுக அரசு .

மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் கோடை கால சிறப்புத் தொகை என விளக்கமளிக்கப்பட்டது. மேலும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை

திமுக மட்டுமல்லாது அதிமுகவும் ஆட்சிக்கு வந்த 2000 தரப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தது.

ஆ்ட்சியை கைப்பற்றினால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10,000 ரூபாய் வழங்குவோம் என்று அதிமுக உறுதி அளித்து இருந்தது.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in