பயணிகள் கவனிக்க : சென்னையில் புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரம், ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
Timings of trains from Egmore to southern districts have been changed from January 1st
Timings of trains from Egmore to southern districts have been changed from January 1st
2 min read

தென் மாவட்ட ரயில்கள்

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில்கள் தான் முன்னிலை வகிக்கின்றன. வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதும்.

2026 ஜன. 1 முதல் ரயில்கள் நேரம் மாற்றம்

இந்நிலையில் 2026 ஜனவரி 1ம் தேதி முதல், எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு, மறு மார்க்கத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன் விவரங்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

1. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 7:45 மணிக்கு பதிலாக காலை 8:00 மணிக்கு புறப்படும்.

2. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் காலை 10:20 மணிக்கு பதிலாக, காலை 10:40 மணிக்கு புறப்படும்.

3. எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், மதியம் 1:45 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது 1:15 மணிக்கு புறப்படும்.

4. எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதியம் 2:45 மணிக்கு பதிலாக 3:05 மணிக்கு புறப்படும்.

5. எழும்பூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7:30 மணிக்கு பதிலாக, 15 நிமிடங்கள் முன்பாகவே, 7:15 மணிக்கு புறப்படும்.

6. எழும்பூரில் இருந்து இரவு 8:10 மணிக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், 35 நிமிடங்கள் முன்கூட்டியே, 7:35 மணிக்கு புறப்படும்.

7. எழும்பூரில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 8:35 மணிக்கு புறப்படும்.

8. எழும்பூரில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், 8:50 மணிக்கு புறப்படும்.

எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளாவின் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் மட்டும் மாற்றப்படவில்லை

ரயில்களின் நேர மாற்றத்தை பயணிகள் குறித்துக் கொண்டு அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களின் நேரமும் மாற்றம்:

1. திருச்சியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், காலை 11:00 மணிக்கு பதிலாக மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.

2. ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ், மாலை 5:50 மணிக்கு பதிலாக மாலை 6:00 மணிக்கு புறப்படும்.

3. செங்கோட்டையில் இருந்து எழும்பூர் வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மாலை 6:45 மணிக்கு பதிலாக 6:50 மணிக்கு புறப்படும்.

4. திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், இரவு 8:40 மணிக்கு பதிலாக 8:50 மணிக்கு புறப்படும்.

5. தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8:40 மணிக்கு பதிலாக 9:05 மணிக்கு புறப்படும்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் வைகை, குருவாயூர், நெல்லை மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படவில்லை.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in