

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆய்வு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்காக பக்தர்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட அதிரடி ரகசிய ஆய்வு மேற்கொண்டார்.
பக்தராக மாறிய அமைச்சர்: ‘ஜி பே’ வழியே சிக்கிய அர்ச்சகர்கள்
கோவிலில் நடக்கும் முறைகேடுகளை தகுந்த ஆதாரத்துடன் பிடிக்கத் திட்டமிட்ட அமைச்சர் ரமேஷ், தனது வழக்கமான பாதுகாப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அடையாளங்களை மறைத்துக்கொண்டு, ஒரு சாதாரண பக்தரைப் போல திருச்செந்தூர் கோவிலுக்குள் நுழைந்தார்.
ரூ.4,000 கட்டணம்
அப்போது, அமைச்சரை பக்தர் தான் என்று நினைத்த சில அர்ச்சகர்கள், அவரை அணுகி விரைவாக தரிசனம் செய்து வைப்பதாக கூறி அமைச்சர் , அவரது உதவியாளர் என அனைவருக்கும் சேர்த்து ரூ. 4,000 கட்டணம் கேட்டுள்ளனர். அமைச்சர் உடனடியாக தனது மொபைல் போன் மூலம், அவர்கள் குறிப்பிட்ட ஜி-பே கணக்கிற்கு அந்த பணத்தை செலுத்தினார்.
அர்ச்சகர்கள் அதிர்ச்சி
பணம் அர்ச்சகர்களின் கணக்கிற்குச் சென்ற அடுத்த சில நிமிடங்களில், தங்களை அணுகியது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் என்ற உண்மை தெரியவந்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லஞ்சப் பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பெற்றதால், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் தப்பிக்க முடியாமல் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர்.
விரிவான விசாரணை மற்றும் முறைகேடுகள் அம்பலம்
இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, அமைச்சர் உடனடியாகக் கோவில் வளாகத்திலேயே அவசர விசாரணையைத் தொடங்கினார்.
அதிரடி உத்தரவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை
அர்ச்சகர்கள் ,மற்றும் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ் தீவிர விளக்கம் கோரினார்.
முறைக்கேட்டில் ஈடுப்பட்டவர்களிடம் விளக்கம்
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், பக்தர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் பெறவில்லை விளக்கக் கடிதம்தான் பெற்றுள்ளேன் என்றும் கோவில் சொத்துகள், வருமானம் தொடர்பாக ஆய்வு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எச்சரிக்கை
இந்த ஆய்வின் முடிவில் முழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி, தயக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
====