
தந்தை, மகன்கள் மோதல் :
Tiruppur SI Shanmugavel Murder Case Update : திருப்பூர் மாவட்டம் சிக்கனூத்து கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் வேலை பார்த்தனர். மற்றொரு மகனான மணிகண்டன் நேற்று முன்தினம் தந்தை பார்க்க வந்திருந்தார். மது அருந்திய பின்பு, மூன்று பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு குடிமங்கலம்(Gudimangalam) சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல், காவலர் அழகுராஜா ஆகியோர் சென்றனர்.
போலீசாரை தாக்கிய குடிகாரர்கள் :
குடிபோதையில் இருந்த மூன்று பேரும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உயிர்தப்ப அவர்கள் ஓட, விரட்டி சென்ற குடிகாரர்கள், அரிவாளால் தாக்கியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல், தலை, கழுத்து(SI Shanmugavel Death) பகுதியில் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையாளிகள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
காவல் நிலையத்தில் கொலையாளிகள் சரண் :
பின்னர் மூர்த்தியும் அவரது ஒரு மகன் தங்கபாண்டியனும் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். தலைமறைவாக இருந்த மணிகண்டனை(Manikandan Encounter) தேடி வந்த தனிப்படை போலீசார், சிக்கனூத்து கிராமத்தில் பதுங்கி இருந்த அவரை இன்று காலை பிடிக்க முயன்றனர்.
மேலும் படிக்க : சிறப்பு SI வெட்டிப் படுகொலை : கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு
கொலையாளி என்கவுண்டர் :
அப்போது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றார். தற்காப்புக்காக மணிகண்டன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர். மணிகண்டன் உடல் உடுமலை(Udumalai Hospital) அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
======