மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு : டிகிரி இருந்தால் போதும்

TMB Job Vacancy Notification 2025 : தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Tamil Nadu Mercantile Bank issued notification for the recruitment of Probationary Officer posts 2025
Tamil Nadu Mercantile Bank issued notification for the recruitment of Probationary Officer posts 2025
1 min read

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி :

TMB Job Vacancy Notification 2025 : தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் 572 கிளைகள் உள்ளன. 12 பிராந்திய அலுவலகங்கள், 13 விரிவாக்க கவுண்டர்கள், 1094 ஏடிஎம் மையங்களையும் மெர்கன்டைல் வங்கி கொண்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறது.

புரொபேஷனரி அதிகாரி பணியிடம் :

இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி, அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புரொபேஷனரி அதிகாரி (Selected as a Senior Customer Service Executive (SCSE) பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் மட்டும் தெரிவிக்கப்படவில்லை.

வயது வரம்பு, கல்வித் தகுதி :

இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதியை(TMB Qualification) பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலை கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருத்தல் அவசியம்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும். முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரங்கள் :

பயிற்சி திட்டத்தின் (Course Program) போது ஆண்டுக்கு ரூ. 3,56,000 ஊதியமாக வழங்கப்படும்.

கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும்.

இண்டெர்ன்ஷிப் காலத்தில் மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.

பணி பயிற்சியின் போது மாதம் ரூ.48,000 வரை கிடைக்கும்(TMB Probationary Officer Salary).

பணியிடம் ஒதுக்கப்பட்ட பிறகு ஆண்டுக்கு ரூ.8,64,000 ஊதியமாக கிடைக்கும்.

புரோகிராம் கட்டணமாக ரூ.2,80,000 நிர்ணயம், 36 மாதங்கள் நிறைவடைந்த பிறகு இதில் பாதியளவு கட்டணம் திருப்பி தரப்படும்.

மேலும் படிக்க : வங்கிகளில் 10,277 காலிப் பணியிடங்கள் : டிகிரி படித்தால் போதும்

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் https://tmb.manipalbfsi.com/sesc-program/ இணையதளத்தில் இந்த பயிற்சி திட்டம் குறித்த தெளிவான மற்றும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி(TMB Bank Job Application 2025 Last Date) (ஆகஸ்டு) கடைசி நாளாகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை.

-----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in